Home
Mobile

Motorola Edge 40 Neo.. நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 நியாயமான காரணம்!

மிகவும் அழகான டிஸ்பிளே, பிரீமியம் டிசைன், 4கே ரெக்கார்டிங், ஐபி68 ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல அம்சங்களுடன் ரூ.30,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா எட்ஜ் 40 இருக்கும் நிலைப்பாட்டில் உங்கள் கவனம் ​​மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மீது மட்டுமே இருக்கிறதா?

ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? என்கிற குழப்பத்தில் நீங்கள் இருந்தால்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற 4 காரணங்களும்.. ஏன் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான ஒரே ஒரு நியாயமான காரணங்களும் இதோ:

Motorola Edge 40 Neo.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

முதல் காரணம் - பிரமிக்க வைக்கும் டிசைன் மற்றும் பில்ட் குவாலிட்டி: மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பை கொண்டுள்ளது. இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், லெதர் பேக் (Leather Back) மற்றும் பான்டோன்-சர்ட்டிஃபைடு கலர்கள் (Pantone-certified colours) உடனான பெரிய 6.55-இன்ச் பிஓஎல்இடி டூயல் கர்வ்டு டிஸ்பிளேவை (pOLED dual-curved display) கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனை (Dust and Water-resistant) கொண்டுள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி எட்ஜ் 40 நியோவானது 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும் திறனை கொண்டது.

இரண்டாவது காரணம் - பெஸ்ட் டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போனின் 6.55-இன்ச் டிஸ்பிளேவானது 2400 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளதால் பிரகாசமானதாகவும், கூர்மையானதாகவும், வண்ணமயமானதாகவும் உள்ளது. இது வீடியோக்களை பார்ப்பதற்கும், கேம்களை விளையாடுவதற்கும் மற்றும் ப்ரவுஸிங் செய்வதற்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.

மூன்றாவது காரணம் - சக்திவாய்ந்த செயல்திறன்: மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7030 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மிகவும் திறமையான மிட்-ரேன்ஜ் ப்ராசஸர் ஆகும். இந்த போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜுடன் வருகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7030 (MediaTek Dimensity 7030) சிப்செட்டும், அதனுடனான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கூட்டணியானது ஹெவியான கேமிங், மல்டி டாஸ்கிங் (Multi Tasking) மற்றும் ஒரே நேரத்தில் பல வகையான ஆப்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளை திறமையான முறையில் கையாள்கிறது.

நான்காவது காரணம் - நீண்ட பேட்டரி லைஃப்: மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது பெரிய 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் இருப்பதை விட பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரு மணி நேரத்திற்குள் பேட்டரியை 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யும்.

வாங்காமல் தவிரப்பதற்கான ஒரே ஒரு காரணம் - பால்ம் ரிஜெக்ஷன் சிக்கல்கள் (Palm Rejection Issues): சில நேரங்களில் இந்த ஸ்மார்ட்போன் உங்கள் உள்ளங்கையை விரல் என்று தவறாக புரிந்துகொண்டு தேவையற்ற டச்களை ரிஜிஸ்டர் செய்கிறது. குறிப்பாக நீங்கள் கேம்களை விளையாடும்போது அல்லது வீடியோக்களை பார்க்கும்போது இது எரிச்சலூட்டும் ஒரு விஷயமாக உள்ளது

இதுதவிர்த்து ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனை ஒரு பெஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் என்று நம்பி கூறலாம். அற்புதமான வடிவமைப்பு, சிறந்த டிஸ்பிளே, சக்திவாய்ந்த ப்ராசஸர் மற்றும் நீண்ட பேட்டரி லைஃப்பை வழங்கும் ஒரு ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ உங்களுக்கானதாக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Reasons to Buy Motorola Edge 40 Neo Without any Hesitation 1 Reason to Skip
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X