ரூ.11,001 டிஸ்கவுண்ட்.. அதிரடி ஆபரில் Honor 5ஜி போன்.. கர்வ்டு டிஸ்பிளே, 100W சார்ஜிங், 5200mAh பேட்டரி!
ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ஒரு ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. அது ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ விவரங்கள்:
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை (Honor 200 5G Launch Price): இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் அமேசான் ஆபர் விலை (Honor 200 5G Amazon Offer Price): தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,001 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.23,998 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,001 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.29,998 க்கு வாங்க கிடைக்கிறது.
நேரடி தள்ளுபடியை தவிர்த்து ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்டும் (அனைத்து வங்கி கார்டுகளிலும்) கிடைக்கிறது. இதன் (Bank Card Instant Discount) மூலம் ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.21,998 ஆகவும், 12ஜிபி ரேம் ஆப்ஷனின் விலையை ரூ.27,998 ஆகவும் குறைக்க முடியும்.
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 4,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் FHD+ OLED கர்வ்டு டிஸ்பிளேவை (Curved Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdrogan 7 Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிர்து. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா+ அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவைகள் உள்ளன.
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (50MP Selfie Camera) கொண்டு உள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை, ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5200mAh பேட்டரியை கொண்டு உள்ளது.
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்க 4 காரணங்கள்:
01. கர்வ்டு டிஸ்பிளே உடனான பிரீமியம் லுக்கை வழங்கும் டிசைன் (Premium Design)
02. ஸ்மூத் ஆன 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்பிளே (Smooth Display)
03. பெஸ்ட் போர்ட்ரெயிட் புகைப்படங்களை வழங்கும் கேமரா செட்டப் (Best Portrait Camera Photos)
04. அதிவேகமான 100W பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் (Good Fast Charging Speed)
ஹானர் 200 5ஜி ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்க 2 காரணங்கள்:
01. ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி இருந்தாலும் கூட இது ஐபி ரேட்டிங்கை கொண்டிருக்கவில்லை (No IP Rating)
02. 100W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5200mAh பேட்டரியை கொண்டிருந்தாலும் கூட இதன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் சேர்க்கப்படவில்லை (No Charger in Retail Box)


Click it and Unblock the Notifications








