ஆபர் விலையில் iPhone 16e விற்பனை ஆரம்பம்: நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க ஒரே 1 காரணம்!
ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் இந்திய விற்பனை தொடங்கி விட்டது. "நல்லா இருக்கு!", "நல்லாவே இல்லை!" என்கிற பல வகையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஐபோன் 16இ மாடலின் ஓப்பன் சேல் இன்று (பிப்.28) முதல் தொடங்கி உள்ளது. உங்களுக்கு ஏதேனும் டவுட் இருந்தால்.. ஐபோன் 16இ மாடலை நம்பி வாங்க 4 காரணங்கள், வாங்காமல் தவிர்ப்பதற்கான 1 காரணம் இதோ:
நம்பி வாங்க காரணம் 01 - புதிய மற்றும் மாடர்ன் டிசைன்: ஐபோன் 16இ அறிமுகத்தின் மூலம் காணாமல் போனது எஸ்இ சீரீஸ் மட்டுமல்ல ஐபோன் எஸ்இ 3 மாடலின் காலாவதியான தோற்றமும் தான். ஐபோன் 16இ ஆனது 6.1 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஃபேஸ் ஐடிக்கான நாட்ச் கொண்ட நேர்த்தியான, நவீன வடிவமைப்க் கொண்டுள்ளது. இதன் பிளாட் அலுமினியம் பிரேம் ஆனது பிரீமியம் உணர்வை தருகிறது!

நம்பி வாங்க காரணம் 02 - சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ்: ஐபோன் 16 ஆனது ஐபோன் 16 மாடலில் காணப்படும் அதே ஏ18 சிப்பை கொண்டுள்ளது, இது சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 4-கோர் ஜிபியு உடன் வரும் ஐபோன் 16இ ஆனது அன்றாடப் பணிகள் முதல் திவீரமான கிராபிக்ஸ் கேம்கள் வரை அனைத்தையும் அசால்ட் ஆக கையாளும். எல்லாவற்றை விட முக்கியமாக இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குவதாக ஆப்பிள் கூறுகிறது
நம்பி வாங்க காரணம் 03 - ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்கள்: ஐபோன் 16இ மாடல் ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ மூலம் இயக்கப்படும் அம்சங்களை முழுமையாக ஆதரிக்கிறது. இதன் பொருள், ஐபோன் 16இ ஆனது வரவிருக்கும் ஆண்டுகளில் ஏஐ தொடர்பான அப்டேட்கள் மற்றும் மேம்பாடுகளை பெறும்; இதன் முன்னோடியை விட நீண்ட காலம் தொடர்புடையதாக, அவுட் டேடட் மாடல் ஆகாமல் இருக்கும்.
நம்பி வாங்க காரணம் 04 - ஆக்ஷன் பட்டன்: முதன்முதலில் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டன், ஐபோன் 16இ மாடலிலும் உள்ளது. இது மற்றொரு பெரிய மேம்படுத்தலாகும். இது பாரம்பரிய ம்யூட் சுவிட்சை ரீபிளேஸ் செய்கிறது மற்றும் கேமரா, ஃப்ளாஷ்லைட் அல்லது விஷுவல் இன்டெலிஜென்ஸ் போன்ற அம்சங்களை விரைவாக அணுகுவதற்கு ஷார்ட்கட்களைத் கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது.
வாங்காமல் தவிர்க்க ஒரே 1 காரணம் - விலை நிர்ணயம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்: ஐபோன் 16இ மாடல் ஆனது முற்றிலும் வேறுபட்ட மாடலாக, பல வகையான மேம்பாடுகளை மற்றும் பல புதிய அம்சங்களை பெற்று உள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். இருப்பினும் ஐபோன் 16இ மாடலின் ஆரம்ப விலையான ரூ.59,900 சில வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம்.
ஐபோன் 16இ மாடலில் இரண்டாவது கேமரா லென்ஸ் இல்லை மற்றும் இது மேக்சேஃப் (MagSafe) ஆக்சஸெரீஸ்களை ஆதரிக்காது. மிக முக்கியமாக ஐபோன் 16இ மற்றும் ஐபோன் 16-க்கு இடையேயான விலை வேறுபாடு அது இருக்கக்கூடிய அளவுக்கு இல்லை. மேலும் ஐபோன் 17 சீரீஸ் 6 மாதங்களுக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஐபோன் 16 மாடலின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
ஐபோன் 16இ மாடலுக்கான ஆரம்ப விலை ரூ.50,000 - ரூ.55,000 க்குள் இருந்திருந்தால்.. அடுத்த ஐபோன் 17இ மாடல் அறிமுகமாகும் வாய், இந்த மாடலின் விற்பனை அடிதூள் பறந்து இருக்கும். ஆனால் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,900 க்கும் மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆப்ஷன்களுமே ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும். இருப்பினும் புதிய ஐபோன் 16இ மாடலின் மீது ரூ.10,000 தள்ளுபடியை பெற்று அதை ரூ.59,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க கூடிய ஆபர் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களில் ஒன்றான ரெடிங்டன் (Redington) தான் ஐபோன் 16இ மீது ரூ.10,000 டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. ஐபோன் 16இ மீது ரெடிங்டன் ஆனது பல பேங்க் ஆபர்களை அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளின் கீழ் ஐபோன் 16இ மாடலை வாங்கும் போது ரூ.4,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.
இதோடு ரெடிங்டன் ஆனது புதிய ஐபோன் 16இ மீது ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் அறிவித்துள்ளது. அதாவது, உங்களிடம் பழைய போன் இருந்தால், அதை ட்ரேட் செய்து ஐபோன் 16இ மாடலின் விலையில் ரூ.6,000 வரை தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 16இ மாடலின் மேலும் ரூ.6000 வரை குறைத்து, மொத்தம் ரூ.10,000 வரை டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.49,900 க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications