Home
Mobile

ஆர்டர் சும்மா கிழியுது! ரூ.8000 பட்ஜெட்ல.. 16GB ரேம், 32MP செல்பீ, IP53 ரேட்டிங், 5000mAh பேட்டரி.. என்ன போன்?

சில தினங்களுக்கு முன்னர்.. சரியாக சொல்ல வேண்டுமென்றால் பிப்ரவரி 16 அன்று.. விலையை மீறிய அம்சங்களுடன் ஒரு "வெயிட்டான" ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது. தற்போது அந்த ஸ்மார்ட்போன் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கும் வந்துள்ளது.

நாம் இங்கே பேசுவது.. ரூ.8000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 32எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix Hot 40i) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்களுடன் சேர்த்து.. இதை நம்பி வாங்குவதற்கான 4 காரணங்களும், வாங்காமல் தவிர்ப்பதற்கான 2 காரணங்களும் இதோ:

ரூ.8000 பட்ஜெட்ல 16GB ரேம், 32MP செல்பீ, 5000mAh பேட்டரி.. என்ன போன்?

ஹொரைஸன் கோல்ட் (Horizon Gold), பால்ம் ப்ளூ (Palm Blue), ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) மற்றும் ஸ்டார்ஃபால் க்ரீன் (Starfall Green) என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் வரும் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (வங்கி சலுகைகளோடு சேர்த்து) ரூ.8,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (வங்கி சலுகைகளோடு சேர்த்து) ரூ 9,999 க்கும் வாங்க கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இது பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படும் (பிப்.21 ஆம் தேதி 12 மணி முதல் விற்பனை தொடங்கும்).

ரூ.8000 பட்ஜெட்ல 16GB ரேம், 32MP செல்பீ, 5000mAh பேட்டரி.. என்ன போன்?

இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 89.7% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ மற்றும் 480நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.5-இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வை கொண்டுள்ளது. இது மாலி-ஜி57 எம்சி1 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் டி606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம்-ஐ விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சத்தின் கீழ் கிட்டத்தட்ட 16 ஜிபி வரை விரிவாக்க முடியும். மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

ரூ.8000 பட்ஜெட்ல 16GB ரேம், 32MP செல்பீ, 5000mAh பேட்டரி.. என்ன போன்?

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 13.0 கொண்டு இயங்கும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் குவாட்-எல்இடி ரிங் ஃபிளாஷ் உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + ஒரு ஏஐ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், டூயல் ஃபிளாஷ் உடனான 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மேலும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் கொண்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்புக்கான ஐபி53 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

நம்பி வாங்குவதற்கான 4 காரணங்கள்:
01. பெரிய 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கூடவே 18W வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
02. பட்ஜெட்டை பொருட்படுத்தாமல் இது பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது
03. ரூ.10,000 க்குள் என்கிற பிரிவில் 8ஜிபி+8ஜிபி ரேம் மற்றும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1டிபி ஸ்டோரேஜை வழங்குகிறது.
04, 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

வாங்காமல் தவிர்ப்பதற்கான 2 காரணங்கள்:
01. இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம். இதன் கேமரா செட்டப் அவ்வளவு சிறப்பான அவுட்புட்க்ளை வழங்கவில்லை; கூடவே 4கே வீடியோ ரெக்கார்டிங்கையும் ஆதரிக்கவில்லை.
02. விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து 16ஜிபி ரேம் கிடைத்தாலும் கூட, அதிகபடியான பயன்பாட்டின் போது, சில நேரங்களில் ஹீட்டிங் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

Best Mobiles in India

English summary
4 Reasons to buy and 2 Reasons to skip Infinix Hot 40i smartphone in India Check Sale Price Offers Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X