கண்ண மூடிட்டு வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் இருக்க ஒரே 1 காரணம்.. 64MP OIS கேமரா, 66W சார்ஜிங்.. என்ன மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) மாடலானது ஒன்பிளஸின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான நோர்ட் சிஇ3 5ஜி (OnePlus Nord CE3 5G) மாடலை தட்டித்தூக்கும் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் நல்ல கேமரா செட்டப், ஸ்மூத் ஆன பெர்ஃபார்மென்ஸ், கிளாஸ் ஆன டிசைனை தேடும் அனைவரையும் ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ள ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி-ஐ நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் உங்களிடம் இருந்தால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஏனென்றால் ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை, ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம் என்பதற்கான 4 முக்கியமான காரணங்களையும் (Reasons to buy), ஏன் வாங்க வேண்டாம் என்பதற்கான 1 நியாயமான காரணத்தையும் (Reason to avoid) தான் இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.
நம்பி வாங்க.. முதல் காரணம்: இதன் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு தான்! இந்த ஸ்மார்ட்போனில் ஸ்காட் க்ஸென்சேஷன் ப்ரொடெக்ஷன் (Schott Xensation protection) உடனான டூயல் கர்வ்டு டிஸ்பிளே உள்ளது. பேக் பேனலில் மேட் கிளாஸ் ஃபினிஷ் உள்ளது. கூடவே இது மெலிதாகவும், கையில் வைத்திருப்பதற்கு மிகவும் இலகுவானதாகவும் இருக்கிறது.
நம்பி வாங்க.. இரண்டாவது காரணம்: இதன் அழகான அமோலெட் டிஸ்பிளே தான்! இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது தவிர, 1300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் மற்றும் எச்டிஆர்10 வீடியோ பிளேபேக்கிற்கான ஆதரவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
நம்பி வாங்க.. மூன்றாவது காரணம்: இதன் உறுதியான செயல்திறன் தான்!: இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடனான புதிய 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரூ.25,000க்கு கீழ் உள்ள விலைப்பிரிவில் தற்போது சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.
நம்பி வாங்க.. நான்காவது காரணம்: இதன் நம்பகமான கேமராக்கள் தான்! இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 64எம்பி ஓஐஎஸ் மெயின் ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆகிய இரண்டிலுமே நம்பகமான கேமரா செயல்திறனை எதிர்பார்க்கலாம். போதுமான வெளிச்சத்தில் இதன் கேமராக்கள் சிறப்பாக செயல்படுகின்றன; லோ-லைட் போட்டோக்கள் கூட ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது
வாங்காமல் தவிர்க்க ஒரே ஒரு காரணம்: இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சில சின்னச்சின்ன ஓட்டைகள் தான். முதல் ஓட்டை - இதில் டூயல் ஸ்பீக்கர்ஸ் இல்லை. மாறாக இதில் சிங்கிள்-பாட்டம் ஃபைரிங் ஸ்பீக்கரே உள்ளது. இது நல்ல அவுட்புட்டை வழங்கினாலும் கூட டூயல் ஸ்பீக்கர் அளவிற்கு டெப்த் ஆக, கிளியர் ஆக இல்லை.
இரண்டாவது ஓட்டை - இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா இல்லை. ஐக்யூ இஸட்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் மெயின் ரியர் கேமராவனது உண்மையிலேயே நல்ல புகைப்படங்களை வழங்கினாலும் கூட, பரந்த அளவிலான காட்சிகளை படம்பிடிக்க அல்லது ஒரே ஃப்ரேமில் நிறைய நபர்களை பொருத்த உதவும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா இல்லாதது, நிச்சயம் ஒரு குறைதான்!
கடைசியாக, விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்7 ப்ரோ 5ஜி-யின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.24,999 க்கும் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கால சலுகையாக இவ்விரு வேரியண்ட்களுமே முறையே ரூ.21,999 மற்றும் ரூ.22,999க்கு விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








