ஒன்ப்ளஸ் 6-ஐ ஏன் வாங்க கூடாது என்பதற்கான 3 பகிரங்கமான காரணங்கள்.!
சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ள ஒன்ப்ளஸ் 6-ன் அறிமுக உரையை தவிர்த்து விட்டு நேரடியாக விஷயத்திற்குள் வருவோம்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ள ஒன்ப்ளஸ் 6-ன் அறிமுக உரையை தவிர்த்து விட்டு நேரடியாக விஷயத்திற்குள் வருவோம். இந்தியாவில் ரூ.34,999/- முதல் (6ஜிபி ரேம் மாடல்) வாங்க கிடைக்கும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாமா.? வேண்டாமா.? என்பதை பற்றிய தொகுப்பே இது.!
இந்த ஒன்ப்ளஸ் 6 விமர்சனத்தில், ஏன் அதை நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 பிரதான காரணங்களுடன் சேர்த்து, ஏன் ஒன்ப்ளஸ் 6-ஐ வாங்க வேண்டாம் என்பது பற்றிய 3 காரணங்களையும் அலசியுள்ளோம். அவைகள் அனைத்தையும் அறிந்து தெளிந்த பின்னர் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.!

நம்பி வாங்க காரணம் #01 : சந்தையில் கிடைக்கும் மிக வேகமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.!
ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்குகிறது. இதே சிப்செட்டை தன சாம்சங் கேலக்ஸி எஸ்9, சோனி எக்ஸ்பீரியா XZ2 மற்றும் எல்ஜி G7 தின்க் ஸ்மார்ட்போன்களும் பயன்படுத்துகின்றன. இருந்தாலும் ஒன்ப்ளஸ் 6 தான் போட்டியிடும் சாதனங்களை விட வேகமாக ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. அதற்கு ஒன்ப்ளஸ் 6-ன் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கைகொடுக்கிறது.

நம்பி வாங்க காரணம் #02 : மிக அழகான, நேர்த்தியான OLED டிஸ்பிளே.!
ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பில் எந்த சமரசமும் இல்லை. அற்புதமான ஹை-எண்ட் வடிவமைப்பை கொண்டுள்ளது. அதற்கு மிக பொருத்தமான 6.28 இன்ச் (சாம்சங் மூலம் கட்டமைக்கப்பட்ட) AMOLED டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. ரூ.35கே என்கிற பட்ஜெட்டில் இந்த டிஸ்பிளே முற்றிலும் நிகரற்றது. ஒரு 2280 x 1080 என்கிற தீர்மானம் மற்றும் 574 நைட்ஸ் பிரைட்னஸ் ஆகிய டிஸ்பிளே அம்சங்கள், ஒன்ப்ளஸ் 6-ஐ வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது.

நம்பி வாங்க காரணம் #03 : அதிவிரைவான சார்ஜிங் தொழில்நுட்ப்பம்.!
முதலில் ஒன்ப்ளஸ் 6-ன் டாஷ் சார்ஜ் நெறிமுறைக்கு நன்றி. அதுதான் மின்னழுத்தத்தை விட மின்னோட்டத்தின் திறனை திகரிக்கும் முன்னுரிமைகளை ஒன்ப்ளஸ் 6-க்கு வழங்கியுள்ளது. இதன் விளைவாக வெறும் 30 நிமிடங்களில் 60-சதவீத சார்ஜ் ஆகும். ஒரு மணி நேரத்திற்குள் அது 90 சதவிகிதத்தை மிக எளிதில் கடக்கிறது.

நம்பி வாங்க காரணம் #04 : ஹை-எண்ட் அம்சங்களுக்கு சம்பந்தம் இல்லாத அட்டகாசமான விலை.!
மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்களின் கீழ், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரேம் ஆனது முறையே ரூ.34,999/-க்கும் மற்றும் ரூ.39,999/-க்கும் வாங்க கிடைக்கிறது. மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாடல் ஆனது ரூ.44.999/-க்கு விற்பனையாகிறது. 128 ஜிபி சேமிப்பு கொண்ட லிமிடெட் சில்க் வைட் மாறுபாடானது ரூ.39.999/-க்கு வாங்க கிடைக்கும். எப்படி பார்த்தாலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 தொடரை விட மிகவும் மலிவான விலை நிர்ணயத்தை ஒன்ப்ளஸ் 6 கொண்டுள்ளது.

வாங்க வேண்டாம் காரணம் #01 : ஏமாற்றம் அளிக்கும் கேமராக்கள்.!
ஒன்ப்ளஸ் 6-ன் 16 எம்பி மற்றும் 20 மெகாபிக்சல் என்கிற டூயல் கேமரா அமைப்பானது முந்தைய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை விட சிறந்த குறைந்த ஒளி செயல்திறனை வழங்குகின்றன தான். ஆனால் அவைகளை விட இன்னும் சிறந்த கேமராக்களை கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படை. இந்த விலைக்கு இந்த அளவிலான கேமரா அமைப்பு மிகவும் போதுமானது தான். ஆனால் கேமரா செயல்திறன் என்று வந்தால் விளையாடு யாரும் ஒப்பிட மாட்டார்கள், புகைப்படங்களோடு தான் ஒப்பீடு செய்வார்கள்.

வாங்க வேண்டாம் காரணம் #02 : சிறப்பான பேட்டரி ஆயுள் இல்லை.!
ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் சோதனையானது 13 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. ஒன்ப்ளஸ் 3 ஆனதோ தோராயமாக 11 மற்றும் ஒரு அரை மணி நேரம் நீடித்தது. ஆனால் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனோ வெறும் 10 மணி நேரம் 33 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆகமொத்தம் ஒன்ப்ளஸ் 6, அதன் பேட்டரி துறையில் பலவீனம் அடைந்துள்ளது.

வாங்க வேண்டாம் காரணம் #03 : வயர்லெஸ் சார்ஜிங் இல்லை; நீர் எதிர்ப்பில் ஓட்டை.!
சந்தேங்கத்திற்கு இடமின்றி, ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு ஹை எண்ட் ஸ்மார்ட்போன் ஆகும். அப்படியிருந்தும் கூட, அதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் இடமபெறவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக, ஒன்ப்ளஸ் 6 ஆனது எந்தவிதமான உண்மையான ஐபி-ரேட் நீர் எதிர்ப்பு திறனும் கொண்டிருக்கவில்லை. அதாவது ஒன்ப்ளஸ் 6 ஆனது மழை தூரலுக்கு மட்டுமே தாங்கும் என்பதால், நீருக்குள் மூழ்கடித்து சோதனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இறுதியாக, ஒன்ப்ளஸ் 6-ல் விரிவாக்கக்கூடிய சேமிப்புக்கான மைக்ரோ ஸ்லாட் கிடையாது.


Click it and Unblock the Notifications