SALE பிச்சிக்குது.. ரூ.3,000 ஆஃபர்.. SONY கேமரா.. 12GB ரேம்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் சேல் பிச்சிக்குது என்று சொல்லும்படி சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.3000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த பிரீமியம் ஒன்பிளஸ் மாடலின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13ஆர் அமேசான் விற்பனை (OnePlus 13R Amazon Sale): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,998ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.39,998 விலைக்கு இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது.

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும்போது, ஒன்கார்டு பயன்படுத்தினால், ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த டிஸ்கவுண்ட் சலுகைகள் போக எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இருக்கிறது. அதாவது, ரூ.40,848 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பெற்று கொள்ள முடியும். இப்போது பீச்சர்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள் (OnePlus 13R Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஆக்டா கோர் (Snapdragon 8 Gen 3 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. கொரில்லா கிளாஸ் 7ஐ (Gorilla Glass 7i) கொண்ட பேனல் கிடைக்கிறது.
1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. கேமராவில் அல்ட்ரா பிரீமியமாக அவுட்புட் எதிர்பார்க்கலாம். 50 மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்5 (Samsung ISOCELL JN5) சென்சார் உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராவிலும் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. கூடுதலாக டெலிபோட்டோவில் 4X லாஸ்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. பிரீமியம் ஒன்பிளஸ் போன்களில் கிடைக்கும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. நீண்ட் பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) உள்ளது.
இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனில் நெபுளா நோய்ர் மற்றும் அஸ்ட்ரல் டிரெயில் ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. மேலும், அட்ரினோ 750 கிராபிக்ஸ் கார்டு, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் மற்றும் ஓரியாலிட்டி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் ஒன்பிளஸ் மாடல்களை பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்டால், இது பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








