Home
Mobile

போடு.. மொத்த இந்தியாவும் வாங்குமே.. வெறும் ரூ.8,500 முதல்.. 4 புது Redmi 5G போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

ரெட்மி (Redmi) நிறுவனத்திற்கு என்ன ஆச்சு.. ரொம்ப நாளாகவே எந்த புது போனையும் அறிமுகம் செய்யவில்லையே என்று கூறி வாயை மூடவில்லை அதற்குள்.. 1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 4 புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? இதோ விவரங்கள்:

என்னென்ன மாடல்கள்? சீன நிறுவனமான ரெட்மி அதன் மிகவும் பிரபலமான ஏ-சீரீஸ் மற்றும் நோட் சீரிஸின் கீழ் மொத்தம் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஏ-சீரிஸின் கீழ் இந்தியாவின் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வெறும் ரூ.8,500 முதல்.. 4 புது Redmi 5G போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

அதனை தொடர்ந்து ரெட்மி நோட் 14 சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, விலை மற்றும் அம்சங்கள்: இந்தியாவில் இது இந்த நவம்பர் மாதமே அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலையை பொறுத்தவரை இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் ஆனால் ரூ.8500 என்கிற ஆபர் விலைக்கு (சில நாட்களுக்கு) விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது.. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் உடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். கூடவே இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் HD+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா, 18W சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளையும் பேக் செய்யலாம்.

ரெட்மி நோட் 14 சீரிஸின் அறிமுக தேதி, விலை மற்றும் அம்சங்கள்: இந்தியாவில் ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது டிசம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ்வின் கூற்றுப்படி, இந்த சீரீஸ் ஜனவரி 10 முதல் 15 ஆம் தேதிக்குள் விற்பனைக்கு வரலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போன் ரூ.12,990 க்கும், ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.16,990 க்கும், ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.22,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மொத்த மிட்-ரேன்ஜ் மார்க்கெட்டையும் கவர் செய்யும் விலைகளில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.67-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே பேனல், மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ், 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5110எம்ஏஎ பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.67-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே பேனல், மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ், 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5510எம்ஏஎ பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும்.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதுவும் 6.67-இன்ச் 120ஹெர்ட்ஸ் OLED டிஸ்பிளே பேனலை கொண்டிருக்கும் ஆனால் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி டெலிபோட்டோ கேமரா, 90W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6200எம்ஏஎ பேட்டரி போன்ற "அப்கிரேடட்" அம்சங்களை கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
4 New Redmi 5G Phones Launching in India Redmi A4 5G Redmi Note 14 Series Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X