Home
Mobile

வரிசை கட்டும் பட்ஜெட் 5G Phoneகள்! Redmi 13 5ஜி, CMF Phone 1, Moto G85 5ஜி, iQOO Z9 Lite 5ஜி! விலை, அம்சங்கள்?

2024 ஜூலை மாதமானது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தால் நிரம்பி வழிய உள்ளது. ரெட்மி நிறுவனமானது ஜூலை 9 ஆம் தேதியன்று ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனையும். அதற்கு முன்பாகவே நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளன. பின்னர் ஜூலை 10 ஆம் தேதியன்று மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இந்த ஜூலையில், இந்திய நிறுவனமான லாவா மொபைல்ஸ் அதன் பிளேஸ் சீரிஸின் கீழ் லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஐக்யூ நிறுவனமானது வருகிற ஜூலை 15 ஆம் தேதியன்று புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

Redmi 13 5ஜி, CMF Phone 1, iQOO Z9 Lite 5ஜி விலை, அம்சங்கள்?

அது ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போனாகும். இது ஐக்யூ இஸட்9 சீரிஸின் கீழ் வெளியாகும் கடைசி மாடலாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த சீரிஸின் கீழ் ஏற்கனவே.. ஐக்யூ இஸட்9எக்ஸ் என்கிற மிட்-ரேன்ஜ் மாடல் மற்றும் ஐக்யூ 9 என்கிற விலையுயர்ந்த மாடல் உள்ளன. ஆகையால் ஒப்பீட்டளவில் ஐக்யூ இஸட்9 லைட் மாடலானது சற்றே குறைக்கப்பட்ட அம்சங்களுடன், மிகவும் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதை உறுதிசெய்யும் வண்ணம், ஐக்யூ இஸட்9 லைட் ஸ்மார்ட்போனில் ஐபி ரேட்டிங் அல்லது வாட்டர் ரெசிஸ்டென்ஸ் இடம்பெறாது என்பதை ஐக்யூ பிராண்ட் தெளிவுபடுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்9எக்ஸ் மற்றும் ஐக்யூ இஸட்9 ஸ்மார்ட்போன்கள் முறையே ஐபி64 மற்றும் இபி54 ரேட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டன.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஐக்யூ இஸட்9 லைட் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் வரும். இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். மீதமுள்ள அம்சங்கள் ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் இந்திய அறிமுகத்தின் போது அறிவிக்கப்படும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இந்தியாவில் இது ரூ.10,499 - ரூ.11,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1) என்னென்ன அம்சங்களை பேக் செய்யும், என்ன விலைக்கு வரும்? இது ஜூலை 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வரும் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யப்படலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 உடன் அனுப்பப்படலாம். விலையை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ரூ.17.999 முதல் ரூ.18,999 க்குள் விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) என்னென்ன அம்சங்களை பேக் செய்யும், என்ன விலைக்கு வரும்? ஜூலை 9-ல் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடன் 5ஜி ஸ்மார்ட்போனின் பிரிவில் வெளியாகும் மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்ட ஸ்மார்ட்போன் என்றும் இது விளம்பரப்படுத்தப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, இது அட்வான்ஸ்டு 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்ட 5030mAh பேட்டரிஏய் பேக் செய்யும். கடைசியாக, இது ஹைப்பர்ஓஎஸ் (அவுட்-ஆப்-பாக்ஸ்) உடன் வரும். இதுதவிர்த்து வேறெந்த அம்சங்களும் டீஸ் செய்யப்படவில்லை. விலையை பொறுத்தவரை, இது ரூ.12,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) என்னென்ன அம்சங்களை பேக் செய்யும், என்ன விலைக்கு வரும்? ஜூலை 10-ல் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 50எம்பி டூயல் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, ஐபி52 ரேட்டிங் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்றவைகளை பேக் செய்யும். விலை ரூ.20.000-ஐ சுற்றி அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 New Budget 5G Phones Redmi 13 CMF Phone 1 Moto G85 iQOO Z9 Lite Launching in India in July 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X