Home
Mobile

2024 தீபாவளி பத்திக்கிச்சு.. 4 Motorola போன்கள் மீது முரட்டு ஆபர் OFFER.. Flipkart-ல் ஆர்டர் அள்ளுது!

ஒரு காலத்தில் தீபாவளி என்றால் புத்தாடைகளுக்கு அதிகம் செலவு செய்வதா அல்லது பட்டாசுகளுக்கு அதிகம் செலவு செய்வதால் என்கிற மனப்போட்டி நிலவியது. ஆனால் இப்போதெல்லாம் "அமேசானில் அதிகம் ஷாப்பிங் செய்வதா அல்லது பிளிப்கார்ட்டில் அதிகம் ஷாப்பிங் செய்வதா?" என்பதாக மாறிவிட்டது. வருடம் முழுக்க கொடுக்காத ஆபர்களை ஓரிரு நாட்களில் அள்ளிக்கொடுப்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் தீபாவளி சிறப்பு விற்பனைக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படியாக அக்.31 ஆம் தேதி வரை நடக்கவுள்ள பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் (Flipkart Big Diwali Sale) போது, அட்டகாசமான ஆபர் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால்.. மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனது பிக் தீபாவளி விற்பனையை பிளிப்கார்ட் வழியாக தொடங்கி உள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

4 Motorola போன்கள் மீது முரட்டு ஆபர் OFFER!

இதன்கீழ் பல வகையான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர்கள் கிடைத்தாலும், மோட்டோரோலா எட்ஜ்50 ப்ரோ, மோட்டோ ஜி85 5ஜி, மோட்டோரோலா எட்ஜ்50 ஃப்யூஷன் மற்றும் மோட்டோ ஜி64 5ஜி ஆகிய 4 பிரபலமான மோட்டோ மாடல்களின் மீது அறிவிக்கப்பட்டுள்ள "அடேங்கப்பா" தள்ளுபடிகளை பற்றி மட்டுமே இங்கே விரிவாக பார்க்கவுள்ளோம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): உலகின் முதல் ஏஐ-வார்டு ப்ரோ-கிரேடு கேமராவை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.27,999 க்கு கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.35,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 144ஹெர்ட்ஸ் கர்வ்டு டிஸ்பிளே, 125W சார்ஜர், 50எம்பி ஏஐ செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களும் உள்ளன (விரிவான அம்சங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்).

மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): மிட்ரேன்ஜ் பிரிவில் ஒரு பவர்புல் ஆன ஸ்மார்ட்போனாக திகழும் இது, தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.15,999 (8ஜிபி ரேம் ஆப்ஷன்) மற்றும் ரூ.17,999 (12ஜிபி ரேம்) ஆப்ஷன் என்கிற தள்ளுபடி விலைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது. ரூ.20,000 க்கு கீழ் 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion): 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு டிஸ்பிளே, நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் மற்றும் சோனி LYTIA 700C கேமரா போன்ற முக்கிய அம்சங்கள் உடன் வரும் இந்த மோடோடோல ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G): ஒருவேளை உங்களுக்கு இன்னும் இறுக்கமான பட்ஜெட் இருந்தால், பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது மோட்டோ ஜி64 5ஜி மாடலை தேர்வு செய்யலாம், தற்போது இது ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6000எம்ஏஎச் பேட்டரி, செக்மென்ட்-லீடிங் ரேம் ஆப்ஷன்களை கொண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5கே பிஎல்ஓடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை இதில் குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போனின் 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Motorola Smartphones gets Big Discount in Flipkart Big Diwali Sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X