iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
ஒவ்வொரு ஆண்டை போலவும் இம்முறையும் 2023 ஐபோன் மாடல்களின் மீது, அதாவது ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இதற்கிடையில், ஐபோன் 15 சீரிஸில் இடம்பெறவுள்ள ஒரு பொதுவான அம்சம் (Common Feature) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதென்ன அம்சம்?
ஆப்பிள் ஆய்வாளர்களான பிளேன் கர்டிஸ் (Blayne Curtis) மற்றும் டாம் ஓ'மல்லி (Tom O'Malley) ஆகியோரின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஐபோன் 15 சீரீஸில் வைஃபை 6இ கனெக்டிவிட்டி (Wi-Fi 6E Connectivity) இடம்பெறும்!

நினைவூட்டும் வண்ணம், ஐபோன் 14 சீரீன் கீழ் உள்ள 3 மாடல்களிலுமே 2.4GHz மற்றும் 5GHz பேண்ட்களில் வேலை செய்யும் திறன் கொண்ட வைஃபை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி உள்ளது.
ஆனால் வரவிருக்கும் ஐபோன் மாடல்களில் வைஃபை 6இ இடம்பெறும் பட்சத்தில், அவைகள் 6GHz பேண்ட்களில் கூட வேலை செய்யும்.
வைஃபை 6இ கனெக்டிவிட்டி: என்ன பயன்?
வைஃபை 6இ கனெக்டிவிட்டியானது பழைய வைஃபை 6-ஐ விட சிறப்பான வயர்லெஸ் ஸ்பீட் (Better Wireless Speed), குறைவான லேடன்சி (Lower Latency) மற்றும் குறைவான சிக்னல் குறுக்கீடுகளை (Less Signal interference) வழங்கும். ஒட்டுமொத்தமாக இது சிறப்பான ஆடியோ மற்றும் கனெக்டிவிட்டி எக்ஸ்பீரியன்ஸை வழங்கும்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைஃபை 6ஜி கனெக்டிவிட்டியானது ஐபோன் 15 சீரிஸின் கீழ் வெளியாகும் அணைத்து மடல்களிலும் இடம்பெறுமா அல்லது ப்ரோ வேரியண்ட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்குமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
ஏனென்றால், ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்புகளான ஐபேட் ப்ரோ (iPad Pro) மாடல்கள் மற்றும் மேக் மினி (Mac Mini) மாடல்கள் மற்றும் மேக்புக் ப்ரோ (MacBook Pro) மாடல்களில் மட்டுமே வைஃபை 6இ அணுக கிடைக்கிறது. இதே பாணி ஐபோன் 15 சீரிஸிலும் பின்பற்றப்படுமா, இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
ஐபோன் 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்!
முன்னரே குறிப்பிட்டபடி, ஐபோன் 15 சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும்: அதாவது ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max ) என மொத்தம் நான்கு வேரியண்ட்கால அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.
ஐபோன் 15 சீரிஸ்: என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஐபோன் 15 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் எல்லா மாடல்களுமே கர்வ்டு எட்ஜ் டிசைனை கொண்டிருக்கலாம்; ஆனால் கர்வ்டு டிஸ்பிளே (Curved Display) வரமால் போகலாம்.

மேலும் அனைத்து மாடல்களுமே ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் உள்ள டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்துடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
வழக்கம் போல இம்முறையும் கேமராக்களில் சில மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம் மற்றும் அனைத்து மாடல்களுமே ஆப்பிளின் ஏ17 பயோனிக் சிப் (A17 Bionic Chip) மூலம் இயக்கப்படலாம்.
ஐபோன் 15 சீரிஸ்: என்ன விலைக்கு அறிமுகமாகும்?
கிடைக்கப்பெற்ற லீக் தகவலொன்றின்படி, ஐபோன் 15 (iPhone 15) மாடலின் விலை நிர்ணயம் 799 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.65,200!
அதேபோல ஐபோன் 15 பிளஸின் (iPhone 15 Plus) விலை நிர்ணயம் 899 அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.73,300) இருக்கலாம்.
கடைசியாக ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) மாடல்களின் விலை நிர்ணயம் முறையே 1,099 அமெரிக்க டாலர்கள் மற்றும் 1,199 அமெரிக்க டாலர்களாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.89,600 மற்றும் 97,800 ஆக இருக்கலாம்!
மேற்கண்ட விலை நிர்ணயங்கள் அமெரிக்க சந்தைக்கானது. அதாவது இந்திய விலை நிர்ணயங்கள் இதை விட அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.

ஐபோன் 15 சீரீஸ்: எப்போது அறிமுகமாகும்?
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரீஸ் மாடல்களை வருகிற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை!


Click it and Unblock the Notifications








