Home
Mobile

ஆளுக்கு ஒரு iPhone 13.. முன் எப்போதும் இல்லாத கம்மி விலை.. பட்டையை கிளப்பும் விற்பனை!

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் தனது வலைத்தளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் ( Big Saving Days Sale) என்கிற சுதந்திர தின சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையின் கீழ் பல பிரபலமான ஆப்பிள் ஐபோன்களின் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது.

என்னென்ன ஐபோன் மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையிலாக நடக்கவுள்ள இந்த விற்பனையின் கீழ் ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 14 ப்ரோ & ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro & Pro Max), ஐபோன் 12 (iPhone 12) மாடல்கள் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைவான விலையில் வாங்க கிடைக்கின்றன.

ஆளுக்கு ஒரு iPhone 13..  முன் எப்போதும் இல்லாத கம்மி விலை!

ஐபோன் 13 மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.58,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுககளை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்; இதன் மூலம் ஐபோன் 13 மாடலின் விலையை ரூ.57,499 ஆக குறைக்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் மேற்குறிப்பிட்ட வங்கி அட்டைகள் இல்லாவிட்டாலும் கூட ஆப்பிள் ஐபோன் 13 மாடலை வாங்குவதற்கு இதுவொரு சிறந்த நேரமாகும். ஏனென்றால் ஐபோன் 13 மாடலின் அசல் விலை ரூ.69,900 ஆகும்; ஆனால் தற்போது இது ரூ.11,401 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 12-ஐ வாங்க விரும்பினால், அதை வாங்காமல் ஐபோன் 13-ஐ வாங்குவதே சிறந்தது. ஏனென்றால் நிகழும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 12 மாடலானது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கும். இதை வாங்குவதற்கு பதிலாக இன்னும் சில ஆயிரங்கள் சேர்த்து ஐபோன் 13-ஐ வாங்கி விடலாம்.

ஐபோன் 13 தான் ஒரு தகுதியான வாங்குதலாக இருக்கும். ஐபோன் 12 இப்போது மிகவும் பழைய மாடலாகி விட்டது. இப்போது அதை வாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை நீங்கள் 1 லட்சத்திற்கு மேல் செலவழிக்க தயாராக இருந்தால்.. இன்னும் பிரீமியமான ஐபோனை வாங்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை கருத்தில் கொள்ளலாம்.

ஐபோன் 14 ப்ரோ ஆனது இந்தியாவில் ரூ.1,29,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.1,17,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ.11,901 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. இது தவிர, மேலே குறிப்பிடப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியும் உள்ளது, இது ஐபோன் 14 ப்ரோவின் இறுதி விலையை ரூ.1,17,249 ஆக குறைக்கும்.

ஒருவேளை நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய திட்டமிட்டால், ஐபோன் 14 ப்ரோவின் விலையை இன்னும் கடுமையாக குறைக்க முடியும். உங்கள் எண்ணமெல்லாம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் மீது இருந்தால்.. பிளிப்கார்ட்டில் இது ரூ.1,26,999 க்கு வாங்க கிடைக்கிறது; நினைவூட்டும் வண்ணம் இதன் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.1,39,900க்கு அறிவிக்கப்பட்டது.

தற்போதைக்கு (2023 ஐபோன் மாடல்கள் அறிமுகமாகும் வரை) ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தான் ஆப்பிளின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் சக்திவாய்ந்த மாடலாகும். அடுத்த தலைமுறை ஐபோன்களை பொறுத்தவரை (ஐபோன் 15 சீரீஸ்) வருகிற செப்டம்பர் 2023 இல் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் அறிமுகமாகும் ப்ரோ மாடல்களின் விலை நிர்ணயமானது முன்னெப்போதை விட அதிகமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 iPhones Including iPhone 13 gets Big Discounts on Flipkart Independence Day Sale Until August 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X