அவசரப்பட்டு.. இந்த புது Redmi 5G போனை வாங்கிடாதீங்க.. அப்புறம் நிதானமா வருத்தப்படுவீங்க! ஏன்னா?
ரெட்மி (Redmi) நிறுவனம் 3 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது: ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 13 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி என 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த சீரிஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 13 5ஜி மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் ஜன.10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. பேஸிக் 6ஜிபி ரேம்+ 128ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம்+ 256ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 12ஜிபி ரேம்+ 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கும் வாங்க கிடைக்கும்.

புத்தம் புதிய ஸ்மார்ட்போனாக இருப்பதால், ரெட்மி நோட் 13 5ஜி மாடலுக்கு எந்த போட்டியும் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்கள் ரெட்மி நோட் 13 5ஜி-க்கு கடும் போட்டியாக நிற்கின்றன.
ஒருவேளை நீங்கள் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் போட க திட்டமிட்டு இருந்தால்.. அதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய 5 பெஸ்ட் ஆல்ட்ர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களின் (Best Alternative Smartphones) பட்டியல் இதோ:

01. விவோ டி2 5ஜி (Vivo T2 5G): இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.38-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி, OIS மற்றும் EIS உடனான 64MP டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.72-இன்ச் FHD+ 120Hz டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

03. ஐக்யூ இஸட்7 5ஜி (iQOO Z7 5G): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999க்கு வாங்க கிடைக்கிறது. இது 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 920 சிப்செட், OIS உடனான 64MP டூயல் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
04. மோட்டோ ஜி84 5ஜி (Moto G84 5G): இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.19,999க்கு வாங்க கிடைக்கிறது. இது 120Hz 6.55-இன்ச் FHD+ pOLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், OIS உடனான 50MP டூயல் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸின் ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31999 க்கும் அறிமுகமாகி உள்ளது. இவைகளும் கூட ஜன.10 முதல் விற்பனைக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications








