Home
Mobile

iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!

ஐபோன் (iPhone) வாங்க வேண்டும் என்கிற எண்ணம் அல்லது ஆசை உங்களிடம் இருந்தால்.. அதை சுக்குநூறாக உடைக்கும்படியான ஒரு அறிவிப்பை சாம்சங் (Samsung) வெளியிட்டுள்ளது. அதென்ன அறிவிப்பு? ஐபோன் வாங்குவதற்கும், சாம்சங்கின் இந்த அறிவிப்பிற்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:

ஆப்பிள் VS சாம்சங்!

ஆப்பிளுக்கும், சாம்சங்கிற்கும் இடையே நடக்கும் "பிளாக்ஷிப் பனிப்போர்" ஆண்டுக்கு ஆண்டு சூடிபிடித்துக்கொண்டே போகிறது.

அதாவது யார் சிறந்த பிளாக்ஷிப் / பிரீமியம் (Flagship / Premium) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறார்கள் என்கிற போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சங்களை எட்டுகிறது.

iPhone களை விட கம்மி விலைக்கு Samsung பிரீமியம் போன்!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், சாம்சங்கின் லேட்டஸ்ட் எஸ் சீரீஸ் மாடல்களுக்கும், ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுக்கும் இடையே (எப்போதுமே) கடும் போட்டி நடக்கும்.

அந்த போட்டியின் ஒரு பகுதியாகத்தான் இந்த அறிவிப்பு!

ஆப்பிளுக்கும், அதன் பழைய மற்றும் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களுக்கும் "வேட்டு வைக்கும்" நோக்கத்தின் கீழ் சாம்சங் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை அறிவிப்பு என்று சொல்வதை விட "தரமான ஆபர்" என்றே கூறலாம்.

இம்மாத தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய கையோடு இந்நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எஸ்22 மாடலின் விலையை "அடிமட்ட அளவுக்கு" குறைத்துள்ளது.

எந்த அளவிற்கு குறைத்துள்ளதென்றால் மிகவும் பழைய ஐபோன் 12, சற்றே பழைய ஐபோன் 13, லேட்டஸ்ட் ஐபோன் 14 என எதை விடவும் மலிவான விலைக்கு இறங்கி வந்துள்ளது - சாம்சங் கேலக்ஸி எஸ்22!

Samsung Galaxy S22 போனின் புதிய விலை!

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெறுவது இது மூன்றாவது முறையாகும். அறிமுகமான வேகத்தில், முதல் விலைக்குறைப்பை பெற்றது.

பின்னர் கடந்த வாரம், கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகமாகும் முன்னர் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றது. தற்போது கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகமான பின்னர் மீண்டும் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது!

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.53,999 க்கும் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.57,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14-ஐ விட மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது!

Samsung Galaxy S22 போனின் முக்கிய அம்சங்கள்!

- 6.1 இன்ச் எஃப்எச்டி+ டிஸ்ப்ளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
- 8ஜிபி ரேம் + 128ஜிபி / 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50எம்பி மெயின் கேமரா
- 12MP அல்ட்ரா-வைட் கேமரா (f/2.2)
- 10MP டெலிஃபோட்டோ கேமரா (f/2.4 )
- முன்பக்கத்தில் 10எம்பி செல்பீ கேமரா

- தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி68 ரேட்டிங்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 3700mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
3rd Price Cut on Samsung Galaxy S22 Makes You to Avoid Buying New and Old iPhone Models
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X