செம்ம டிவிஸ்டு! OnePlus 12, OnePlus 12R இல்லாம 3-வது ஒன்பிளஸ் போன் அறிமுகத்திற்கு ரெடி! என்ன மாடல்? என்ன விலை?
இம்மாத தொடக்கத்தில் சீன சந்தையில், ஒன்பிளஸின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 12 (OnePlus 12) அறிமுகமானது. இது 2024 ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நாளில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது.
ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் விலைப்பிரிவில் (Premium Price Range), அதாவது ரூ.60,000 - ரூ.65,000 பட்ஜெட்டிலும், ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவிலும் (Mid-range Price Range), அதாவது ரூ.40,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாக உள்ளன.

இதற்கிடையில் மூன்றாவதாக ஒரு ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்றும், அது ஒன்பிளஸின் பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக (OnePlus Budget Smartphone) அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) என்கிற பெயரின் கீழ் (ரீபிராண்டட் வெர்ஷன் ஆக) இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2வி (OnePlus Ace 2V) ஆக அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே பாணியில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 4 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? கிடைக்கப்பெற்ற லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 7 Gen 3 Chipset) பேக் செய்யலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உடனான பிளாட் டிஸ்பிளேவுடன் (Flat Display) வரலாம்.

ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்பை பற்றி பேசுகையில், இது ஏற்கனவே ஹானர் 100 (Honor 100) மற்றும் விவோ எஸ்18 (Vivo S18) போன்ற ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த சிப்செட் தான். இதே சிப்செட் தான் ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) சீரீஸையும் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எப்போது அறிமுகமாகும்? நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஏஸ் 2வி கடந்த மார்ச் 2023 இல் அறிமுகமானது. இதே போன்ற லான்ச் டைம்லைனை (Launch Timeline) ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனிலும் காணாலாம். பெரும்பாலான புதிய ஸ்மார்ட்போன்கள் அவற்றின் முன்னோடிகளை விட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகம் செய்யப்படுவதால், ஒன்பிளஸ் ஏஸ் 3வி மாடலானது 2024 பிப்ரவரியில் அல்லது 2024 மார்ச்சில் அறிமுகமாகலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலையோடு ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி-யின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
2024-ல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி, வருகிற ஜனவரி 4 ஆம் தேதியன்று, ரெட்மி 13 நோட் சீரீஸ் (Xiaomi Redmi Note 13 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஜனவரி 2024-ல் விவோவின் பிளாக்ஷிப் சீரிஸான விவோ எக்ஸ்100 சீரீஸ் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என 2 மாடல்கள் அறிமுகமாகும். சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்களும் கூட ஜனவரி 2024-ல உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும். அனைத்தும குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








