3ஜி நோக்கியா 3310 (2017) பீச்சர் போன், நோக்கியா 8 உடன் வெளியாகும்.?!

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம், நோக்கியா 3310 (2017) பீச்சர் தொலைபேசியின் ஒரு 3ஜி மாறுபாட்டை அறிவிக்கும் என்ற தகவல் கடந்த மாதம் வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய நோக்கியா 3310 2ஜி ஆதரவு பீச்சர் போன் இந்நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தபட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

3ஜி நோக்கியா 3310 (2017) பீச்சர் போன், நோக்கியா 8 உடன் வெளியாகும்.?!

இந்த புதிய எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் புதிய தொலைபேசியானது எப்சிசி (அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன்) சான்றளிப்பை பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக அக்கருவி மாதிரி எண் டிA-1036 என்ற பெயருடன் ஒரு 3ஜி தொலைபேசியாக தெரிகிறது. மேலும் சமீபத்திய அறிக்கைகளிலிருந்து, இந்த கருவி ஒரு நோக்கியா 3310 (2017) 3ஜி மாறுபாடாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் எம்டபுள்யூசி 2017 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 3310 (2017) 2ஜி மாறுபாடு ஆனது மாடல் எண் டிஏ-1030 என்ற பெயர் கொண்டுள்ளது என்பதும் தற்போது எப்சிசி தரவுத்தளத்தில் காணப்படும் இந்த கருவியின் நீளம் மற்றும் அகலம் சமீபத்திய நோக்கியா 3310 2ஜி மாறுபாட்டிற்கு ஒத்ததாகத் தோன்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களினால் தான், இந்த புதிய சாதனமானது நோக்கியா 3310 (2017) 3ஜி மாறுபாடு என்று நம்பப்படுகிறது.

எப்சிசி சான்றிதழ் தரவுத்தளத்திலில் காணப்பட்டுள்ள இந்த 3ஜி நோக்கியா 3310 (2017) ஆனது 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டு பேண்ட்களையும் அமெரிக்காவில் ஆதரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஆகஸ்டு 16 அன்று இக்கருவி அறிமுகப்படுத்தப்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

3ஜி நோக்கியா 3310 (2017) பீச்சர் போன், நோக்கியா 8 உடன் வெளியாகும்.?!

எப்சிசி சான்றிதழ் தரவுத்தளத்திலில் காணப்பட்டுள்ள இந்த 3ஜி நோக்கியா 3310 (2017) ஆனது 2ஜி மற்றும் 3ஜி ஆகிய இரண்டு பேண்ட்களையும் அமெரிக்காவில் ஆதரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஆகஸ்டு 16 அன்று இக்கருவி அறிமுகப்படுத்தப்படலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

எச்எம்டி நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இதேபோன்ற ஒரு சாதனம் வெளியிடப்பட்டு விட்டதால், இந்த 2ஜி மாறுபாடு சார்ந்த வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும்வரை இதை ஒரு சிட்டிகையில் இருந்து உப்பை எடுத்துக்கொள்ளும் அளவை போல் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Best Mobiles in India

English summary
3G Nokia 3310 (2017) likely clears FCC; to be launched alongside Nokia 8. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X