TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
3டி வீடியோ கேம் ஆடுவதில் புதிய அனுபவம்: எல்ஜியின் புதிய போன்
3டி கிராபிக்ஸ் மற்றும் மோஷன் சென்சிங் கொண்ட 17வீடியோ கேம்கள் இதில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 3டி தொழில்நுட்பம் கொண்ட ஸ்கிரீனை விஷேச கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்க வேண்டும். ஆனால், இந்த போனில் வெறும் கண்ணால் 3டி வீடியோ கேம்களை ஆடி மகிழலாம்.
வீடியோ கேம்களை பிரதான அம்சமாக கொண்டு வந்தாலும், இதர அம்சங்களிலும் இந்த போன் சளைக்காமல் போட்டி போடுகிறது.
ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ பிளாட்பார்மில் இயங்கும் இந்த போன் 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது. இது 3டி தொழில்நுட்பத்தில் அதிவேகமான வீடியோ கேம் அனுபவத்தை தருகிறது.
4.3 இஞ்ச் தொடுதிரை எல்ஜியின் சொந்த 3டி இன்டர்ஃபேசில் இயங்குகிறது. பின்பக்கம் 5 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் முகப்பு கேமராவும் உள்ளது.
இந்த போனில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்திற்காக, இதுவரை எந்த போனிலும் பயன்படுத்தாத புதிய சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளதாக எல்ஜி கூறுகிறது. இந்த சாப்ட்வேர் மூலம், 2டி வீடியோ கேமை 3டி வீடியோ கேமாக மாற்ற முடியும்.
தற்போது அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போன் விரைவில் இந்திய சந்தையிலும் களமிறங்க இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது. இந்த போனுக்கு எச்டிசியின் இவோ 3டி போன் கடு்ம் போட்டியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வந்துள்ள எல்ஜி ஆப்டிமஸ் 3டி இந்தியாவில் ரூ.22,500க்கு விற்பனைக்கு வரலாம் என்று கருதப்படுகிறது.