Vivo வச்சான் பாரு.. ரூ.2,350 ஆஃபரில் 7200mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தில் டி சீரிஸ் மாடல்கள் பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், கேமரா பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இதனாலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) ஸ்மார்ட்போன் சோனி சென்சார் கேமரா, 7200mAh பேட்டரியுடன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் எம்ஆர்பி விலையில் இருந்து 39 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,350 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.25,649 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் கிடைக்கிறது.
இதுபோக கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேகமாக கேம் வாய்ஸ் சேஞ்சர் (Game Voice Changer), அல்ட்ரா கேம் மோட் (Ultra Game Mode) மற்றும் 4டி கேம் வைப்ரேஷன் (4D Game Vibration) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.76 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளேவுடன் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
32 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.39 எம்எம் தடிமன் வருகிறது. 219 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன.
டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூரபிலிட்டியில் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பட்டையை கிளப்புகிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுத்துள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ. 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது. சைபர் கிரீன் (Cyber Green), ஃபிளேம் ரெட் (Flame Red) மற்றும் ஸ்டார் சில்வர் (Star Silver) ஆகிய கலர்களில் இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
