Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போனுககு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போனுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,795 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G specifications): தரமான ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன். 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். அதேபோல் மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), டேய்பிரேக் ப்ளூ (Daybreak Blue), தண்டர் கிரே (Thunder Grey) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த போன். பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (25W fast charging) வசதியும் உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11 ax), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
39 Percent Discount on Samsung Galaxy M35 5G with 6GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X