Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.7,500 ஆஃபர் ரேட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 7100mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் பிரியர்களையும் போட்டிப்போட்டு ஆர்டர் செய்ய வைக்கும்படியான தள்ளுபடி விலைக்கு மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் (motorola edge 70 Max) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 7100mAh பேட்டரி கொடுக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.7,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.47,499 விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கலாம். டார்க் ஷேடோ, ஐஸ் மெல்ட் மற்றும் அக்வா கிரே கலர்களில் கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.7,500 ஆஃபர் ரேட்ல SONY கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் அம்சங்கள் (motorola edge 70 Max Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் அளவிலான (1440 x 3168 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் 2K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.

பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) பிராசஸர் இடம்பெற்றுள்ளது. கிராபிக்ஸ் செயல்திறனுக்காக அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, சோனி லைட்டியா 710 (Sony LYTIA 710) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜியும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியும் கிடைக்கிறது. மேலும், மேக்ரோ ஆப்ஷனும் இந்த ரியர் கேமரா செட்டப்புக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன் 32 எம்பி ஃப்ரன்ட் கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் இதில் இடம்பெற்றுள்ளன. பேட்டரியில் பட்டையை கிளப்புகிறது.

90W டர்போபவர் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 7100mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 25W மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் (Magnetic Wireless Charging) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 8.29 மிமீ தடிமன் மற்றும் 221 கிராம் எடையுடன் வருகிறது. மேலும், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டியையும் கொண்டுள்ளது.

எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனுடன் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistant) வசதிக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA), டுயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளன.

Best Mobiles in India

English summary
39 Percent Discount on motorola edge 70 Max With 8GB RAM in Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X