தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. IP67 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5G போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (SAMSUNG Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், எக்ஸிநோஸ் சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A35 5G Specifications): 6.6 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை வழங்குகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது.
சாம்சங் ஒன் யுஐ 6 (Samsung One UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இந்த சாம்சங் மாடலில் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் மற்றும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








