ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.25,000 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் 200 எம்பி கேமரா, 12ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட ஹானர் 90 (HONOR 90) போனுக்கு நம்ப முடியாத வகையில் ரூ.5,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் (2664 × 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட குவாட் கர்வ்ட் அமோலெட் (Quad Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட், 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்டுள்ளது.
அதோடு மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ஹானரில் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) வருகிறது.
ஆகவே, 200 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா வருகிறது. அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 2 எம்பி டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மூவிங் போட்டோ (Moving Photo), ஏஐ போட்டோகிராபி (AI Photography), சூப்பர் வைடு ஆங்கிள் (Super Wide Angle), மல்டி வீடியோ (Multi-Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

அதேபோல 2டி பேஸ் அன்லாக் (2D Face Unlock) கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஹானர் போனில் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.
இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இதன் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது அமேசான் குடியரசு தின விற்பனையை (Amazon Republic Day Sale) முன்னிட்டு இதுவரையில் கொடுக்கப்படாத டிஸ்கவுண்ட்டுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹானர் 90 போனுக்கு ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,259 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டுக்கு எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.
ஆகவே, மொத்தமாக ரூ.5,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.25,749 விலையில் இந்த போனை வாங்கலாம். பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, 66W சூப்பர்சார்ஜ் போன்ற பிரீமியம் அம்சங்கள் வேண்டுமானால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








