Home
Mobile

இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ரூ.6299 பட்ஜெட்ல 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung போன்..

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது flipkart monumental sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் ஜனவரி 19-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்05 போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதன்படி பிளிப்கார்ட் சிறப்பு விறப்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்05 போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கவிட முடியும்.

இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ஆஃபரில் Samsung போன்..

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன். எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ஆஃபரில் Samsung போன்..

சாம்சங் கேலக்ஸி எப்05 போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியுடன் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), டைப்-சி போர்ட் (Type-C Port) போர்ட், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount on SAMSUNG Galaxy F05 with 50MP Camera in Flipkart Monumental sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X