Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.6,249 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

வேகன் லெதர் பேனல் கொண்ட சாம்சங் போனை நம்ப முடியாத அடிமட்ட பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், இப்போது கிடைக்கும் பிளிப்கார்ட் விற்பனையை பயன்படுத்தி கொள்ளலாம். 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 4 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) போன் நம்ப முடியாத கம்மி விலைக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்05 பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy F05 Flipkart Sale): இந்த சாம்சங் போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.6,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.6,249 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த விலை நேரடி விலை குறைப்பு மூலமாக கிடைக்கிறது. ஆகவே, டெபிட் & கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தாமலேயே இந்த விலையில் வாங்கி கொள்ள முடியும். இதுபோக ரூ.5,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. வீகன் லெதர் பேனல் கொண்ட டிவைலைட் ப்ளூ (Twilight Blue) கலர் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): இவ்வளவு கம்மியான பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட் ஆகியவற்றை கொடுக்கிறது. ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கார்டு வருகிறது.

பட்டையை கிளப்பும் 4ஜி கனெக்டிவிட்டி கொடுக்கும்படி ஆக்டா கோர் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (Octa Core 12nm MediaTek Helio G85) சிப்செட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனானது, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது.

அதேபோல 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 2 டிபி வரையில் கூடுதல் ஸ்டோரேஜ் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கிறது. இந்த சிலாட் உடன் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. இந்த சாம்சங் போனானது, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அதற்கு 2 எம்பி செகண்டரி டெப்த் சென்சாரை கொடுக்கிறது.

சொல்லப்போனால், இந்த பட்ஜெட்டில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்த மாடலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அதேபோல 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் வருகிறது. ஆகவே, ஸ்லிம் பாடி எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், லெதர் பேக் பேனலுடன் ஓரளவு ஸ்லிம் கிடைக்கும்.

மற்ற பீச்சர்களை பார்க்கையில், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஜிபிஎஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், வழக்கமான வை-பை 802 மற்றும் ப்ளூடூத் 5.3 ஆகியவை வருகின்றன.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount on Samsung Galaxy F05 With 4GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X