ஆளுக்கு 1 ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ரெட்மி போன்கள் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,032 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரெட்மி போனை ரூ.8782 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) ரெட்மி 13சி 5ஜி போனில் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது.
அதேபோல் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் உடன் இந்த அட்டகாசமான ரெட்மி போன் வெளிவந்துள்ளது.
6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுதவிர இந்த போனின் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வசதியுடன் ரெட்மி 13சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த போனில் உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கம். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack), 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS), போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








