யாரு சாமி அவன்.. ரூ.19,799 பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பெரிய பேட்டரியை கொடுக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல் பைபாஸ் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் பட்டையை கிளப்பிய ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த மாடலின் விவரங்கள் இதோ.
4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,1999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,200 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.19,799 பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

ரியல்மி பி4ஆர் 5ஜி அம்சங்கள் (Realme P4R 5G Specifications): 50 எம்பி மெயின் கேமராவில் கேலக்ஸி கோர் ஜிசி50எப்6 (GC50F6) சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்சர் கொடுக்கப்பட்டுள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்டுள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும், சினிமாடிக் மோட் (Cinematic), டூயல் வியூ வீடியோ (Dual-view video) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹை-ரெஸ் (HI-RES), டில்ட்-ஷிப்ட் (TILT-SHIFT) போன்ற மோட்களும் கிடைக்கின்றன. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 254 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பாண்டா 1681 (Panda 1681) கவர் கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) இதில் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மிகப்பெரிய 8000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) ஆதரவும் கிடைக்கிறது. மேலும், வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏஐ பவர் மேனேஜ்மென்ட் (AI Power Management) இதில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஏஐ லாங்-லைப் அல்கோரிதம் (AI Long Life Algorithm) உள்ளத ஏஐ நைட் சார்ஜிங் மோட் (AI Night Charging Mode) மற்றும் ஏஐ கோல்டு சார்ஜிங் மோட் (AI Cold Charging Mode) உள்ளிட்ட பல அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் மற்றும் 224 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
IP65 ரேட்டிங் மற்றும் MIL-STD 810H சான்றிதழ் பெற்ற மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி இதில் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Ultra-Linear Bottom-ported Speaker) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications