கிடுகிடுவென குறைந்த ரியல்மி 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரியல்மி 12 பிளஸ் 5ஜி (realme 12+ 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி 12 பிளஸ் 5ஜி அம்சங்கள் (realme 12+ specifications) : தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இதில் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 12 பிளஸ் 5ஜி. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் ரியல்மி யுஐ 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் (Sony LYT-600 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வழங்கப்பட்டுள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரியல்மி 12 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட், வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








