Home
Mobile

SALE பிச்சிக்குது.. ரூ.11,399 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. 13MP கேமரா.. எந்த மாடல்?

போகோ சி81எக்ஸ் (POCO C81x) ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் தள்ளுபடியுடன் அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ள இப்போது நேரம் வந்துவிட்டது. 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 2 டிபி மெமரி, 13 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 37 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.600 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,399 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிரீமியம் லுக் கொடுக்கும்படி 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.11,399 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 3 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மட்டுமல்லாமல், மைக்ரோ எஸ்டி கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

போகோ சி81எக்ஸ் அம்சங்கள் (POCO C81X Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது.

இருப்பினும், 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) பேக் செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பீச்சர்களுடன் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + 8 எமபி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

இந்த பட்ஜெட்லும் நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட பீச்சர்களுடன் 2X இன்-சென்சார் ஜூம் கொடுத்துள்ளது. மேலும் 10X டிஜிட்டல் ஜூம் செய்து கொள்ளலாம். இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனானது, பேட்டரி பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. 15W சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5200mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. மொத்தமாக 8.26 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. பேட்டரியுடன் 193 கிராம் எடை வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), IP52 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
37 Percent Discount on POCO C81x With 3GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X