Home
Mobile

வெளுக்குது விற்பனை.. ரூ.23000 விலை குறைப்பு.. SONY கேமரா.. QUAD டிஸ்பிளே.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

குவாட் எச்டி பிளஸ் ரொசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, சோனி ஐஎம்எம்எக்ஸ்890 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) இப்போது நம்ப முடியாத விலை குறைப்பினால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட பாதி விலையே குறைந்துள்ளது. இதுபோக எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 11 போனின் விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் 11 5ஜி விலை (OnePlus 11 5G Price): இந்த போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.61,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அமேசான் விற்பனையில் (Amazon Sale) இப்போது ரூ.23,000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.36,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. வெறும் ரூ.38,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

வெளுக்குது விற்பனை.. ரூ.23000 விலை குறைப்பு.. SONY கேமரா.. எந்த மாடல்?

டைட்டன் பிளாக் (Titan Black) மற்றும் எடர்னல் கிரீன் (Eternal Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் பீச்சர்கள் கட்டாயம் மிரளவிடும்படியே இருக்கிறது. ஹாசல் பிளாட் கேமரா சிஸ்டம் தொடங்கி 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி சிஸ்டம் வரையில் அல்ட்ரா பிரீமியமாக பீச்சர்களை பேக் செய்துள்ளது. முழு பீச்சர்களை பார்ப்போம்.

ஒன்பிளஸ் 11 5ஜி அம்சங்கள் (OnePlus 11 5G Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) வருகிறது. பிரீமியம் அவுட்புட் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொண்டிருக்கிறது. இருப்பினும், அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் மட்டுமே வருகிறது.

6.7 இன்ச் (3216 x 1440 பிக்சல்கள்) 2.75டி கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆப்10பிளஸ் (HDR10+), 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Visio) உள்ளது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் போன்களில் வரும் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் கொண்ட 32 டெலிபோட்டோ கோமரா வருகிறது.

இந்த டிரிபிள் ரியர் கேமராவில் ஓஐஎஸ் (OIS), மேக்ரோ ஆப்ஷன், 2X ஆப்டிகல் ஜூமிங், ஆட்டோபோகஸ் (Autofocus) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ஷூட்டரில் 1080p வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் மட்டுமல்லாமல், 8 ஜிபி + 128 ஜிபி மாடலும் இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) போன்ற பீச்சர்களை கொண்டிருக்கிறது. பிரீமியம் போனை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க இது நல்ல நேரமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount on OnePlus 11 5G With 16GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X