பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 50MP + 50MP கேமரா.. 4720mAh பேட்டரி.. எந்த போன்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) மெயின் மற்றும் செகண்டரி அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 4720mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் 5ஜி (Infinix ZERO Flip 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. டைமன்சிட்டி 8020 சிப்செட் கொண்ட இந்த ஃபிளிப் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் ஃபிளிப் மாடல்களில் மோட்டோவுக்கு பிறகு இன்பினிக்ஸ் நிறுவனமே சொல்லி கொள்ளும்படியான பீச்சர்களை கொடுக்கிறது. இந்த வரிசையில் இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் 5ஜி களமிறக்கப்பட்டது. ரூ.49,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.5,000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை மல்டிபிள் பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு பெறலாம். இதில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் ரூ.5,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே கார்டில் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.6,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இருக்கிறது.
எப்படி பார்த்தாலும், ரூ.44,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ப்ளாசம் க்ளோவ் (Blossom Glow) மற்றும் ராக் பிளாக் (Rock Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஸ்லிம் லுக்கில் எதிர்பார்க்கும்படி 7.64 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. மெட்டாலிக் ஃபிரேம் வருவதால் 195 கிராம் எடை வருகிறது. இப்போது, பீச்சர்களை பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் 5ஜி அம்சங்கள் (Infinix ZERO Flip 5G Specifications): இந்த போனில் 6.9 இன்ச் (1080 x 2640 பிக்சல்கள்) மெயின் அமோலெட் (Main AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 413 பிபிஐ டென்சிட்டி, 360Hz டச் சாம்பிளிங் கேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

3.64 இன்ச் (1056 x 1066 பிக்சல்கள்) அவுட்டர் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1100 பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 413 பிபிஐ டென்சிட்டி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு மட்டும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது.
இந்த ஜீரோ ஃபிளிப் 5ஜி போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி + 8 ஜிபி விர்ச்சுவல்) மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14.5 (XOS 14.5) கிடைக்கிறது. அதேபோல மாலி ஜி77 ஜிபியு கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8020 6என்எம் (MediaTek Dimensity 8020 6nm) சிப்செட் கிடைக்கிறது.
சாம்சங் ஜிஎன்5 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + பிடிஏஎப் ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 சென்சார் மற்றும் இன்-பில்ட் ஃபிளாஷ் கிடைக்கிறது.
இந்த ஜீரோ ஃபிளிப் 5ஜி போனில் 4720mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதற்கு வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடையாது. ஜேபிஎல் ஆடியோ டியூனிங் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








