Home
Mobile

அடிச்சான் பாரு.. OPPO K12x 5G விலை ரூ.25,000 இல்லயாம்.. ரூ.14,999 தானாம்.. என்னென்ன அம்சங்கள்?

ஒப்போ (OPPO) நிறுவனம், ஜூலை 29 ஆம் தேதி அன்று அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அது ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் ஆர்மர் பாடி (360° Damage-Proof Armour Body) உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக என்ன விலைக்கு வரும்? முன்னதாக ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இது ரூ,25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

OPPO K12x 5G விலை ரூ.25,000 இல்லயாம்.. ரூ.14,999 தானாம்!

ஏனென்றால் நோர்ட் சிஇ 4 5ஜி மாடலானது இந்தியாவில் ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுடைய கணிப்பின்படி இது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக மைக்ரோசைட் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தோன்றுகிறது. அதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களும், அறிமுகத்திற்கு பின் இது பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7.68மிமீ அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்புடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ப்ரீஸ் ப்ளூ மற்றும் மிட்நைட் வயலட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்திய மற்றொரு அம்சம், இந்த ஸ்மார்ட்போன் 360 டிகிரி டேமேஜ் ப்ரூப் ஆர்மர் பாடி உடன் வரும். இதுதவிர்த்து இந்த புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்பிளாஷ் டச் உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இது பயனர்கள் ஈரமான கைகளுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த அனுமதிக்கும்,

பேட்டரியை பொறுத்தவரை, ஒப்போகே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜுடன் வரும். இது 5,100mAh பேட்டரியை பேக் செய்யும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 120 ஹெர்ட்ஸ் அல்ட்ரா பிரைட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகமான ஒப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போனில் உள்ள பல அம்சங்களை பகிர்ந்துகொள்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தகது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் நாம் கண்ட பெரும்பாலான அம்சங்கள் ஒப்போ கே12எக்ஸ் 5ஜி-யின் சீன வேரியண்ட்டில் உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடலானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகமானது.பேக் பேனலில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கடைசியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,500mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
360 Degree Damage Proof Armour Body Oppo K12x 5G To Launch in India on July 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X