Home
Mobile

ஆர்டர் தெறிக்குது.. வெறும் ரூ.8499 போதும்.. FHD டிஸ்பிளே.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி பிரியர்களை மிரளவிடும்படியான தள்ளுபடியில் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ரெட்மி 12 (Redmi 12) போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரெட்மி 12 அம்சங்கள் (Redmi 12 Specifications): இந்த ரெட்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்டிருக்கிறது. அதோடு ஆர்ம் மாலி ஜிபியு (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.8499 போதும்.. FHD டிஸ்பிளே.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த மாடலில் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.69 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவுக்கு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

இந்த ரெட்மி போனுக்கு IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரெட்மி மாடலில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.8499 போதும்.. FHD டிஸ்பிளே.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த ரெட்மி போனின் கனெக்டிவிட்டி மற்றும் சிலாட் அம்சங்களை பார்க்கையில், டூயல் நானோ சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. இதுவொரு 4ஜி மாடல் என்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த ரெட்மி போனில் மூன் ஸ்டோன் சில்வர் (Moonstone Silver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.9,499ஆக குறைக்கப்பட்டது. இந்த விலையில், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அசத்தலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனை ஐசிஐசிஐ அல்லது எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி வாங்கினால், ரூ 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ 8499க்கு வாங்கி கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
36 Percent Disount on Redmi 12 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X