Home
Mobile

இதுதான் ஆஃபர்.. ரூ.16,499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5200mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5200mAh பேட்டரி போன்ப மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் ரூ.21,999 பட்ஜெட்டில் வெளியான ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G) போனானது, இப்போது வெறும் ரூ.16,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Realme P2 Pro 5G Flipkart Sale): இந்திய மார்கெட்டில் வெளியானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999 ஆக இருந்தது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருந்தது.

இதுதான் ஆஃபர்.. ரூ.16,499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5200mAh!

ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் நேரடி விலை குறைப்பில் இப்போது ஆர்டருக்கு வந்துள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை இப்போது ரூ.16,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இது ரூ.5,500 விலை குறைப்பில் கிடைப்பதாகும். இந்த விலையில் வாங்கி கொள்ள டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தேவையில்லை.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.18,749 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலானது ரூ.20,999 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. ஆகவே, அதிகபட்சம் ரூ.6,000 நேரடி விலை குறைப்பில் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். பேரட் கிரீன் (Parrot Green) மற்றும் ஈகிள் கிரே (Eagle Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இதுதான் ஆஃபர்.. ரூ.16,499 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5200mAh!

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P2 Pro 5G Specifications): இந்த ப்ரோ மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மட்டுமே 14 ஜெனரேஷனுடன் கிடைக்கிறது. ஆனால், பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்க 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) எஸ்ஓசி கிடைக்கிறது. இதற்கு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU), ரியல்மி யுஐ 5.0 கிடைக்கிறது.

இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி போனில் சோனி எல்ஒய்டி 600 சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டூயல் ரியர் கேமராவில் ஏஐ ஸ்மார்ட் ரீமூவல் (AI Smart Removal), சூப்பர்ஓஐஎஸ் (SuperOIS) போன்ற பீச்சர்கள் உள்ளன.

Take a Poll

மெயின் கேமராவை போலவே சோனி சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5200mAh பேட்டரி கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்களை பேக் செய்துள்ளது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percent Discount on Realme P2 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X