முரட்டு டிஸ்கவுண்ட்.. பிச்சிக்குது Pixel சேல்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 4575mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் கூகுள் பிக்சல் (Google Pixel) போன் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பக்காவான நேரம் வந்துவிட்டது. அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியான கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. சூப்பர் ஆக்டுவா அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் ஜிஎன்2 சென்சார் கேமரா, 7 வருட ஓஎஸ் அப்டேட், 4575mAh பேட்டரி, 27W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18 வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த பிக்சல் போனின் விவரங்கள் இதோ.
கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): இந்த பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கூகுள் டென்சார் ஜி3 (Google Tensor G3) ப்ராஸசர் பேக் செய்யப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்டை இதில் பெற்று கொள்ளலாம். செகியூரிட்டிக்காக டைட்டன் எம்2 (Titan M2) சிப் கிடைக்கிறது.

6.2 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) சூப்பர் ஆக்டுவா அமோலெட் (Super Actua AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் போக ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அலுமினியம் ஃபிரேம் (Aluminium Frame), மேட் கிளாஸ் பினிஷிங் பாடியில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த பிக்சல் 8 போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட் வருகிறது.
கேமராவில் பிரீமியம் சென்சார்கள் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (மேக்ரோ ஆப்ஷன்) வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார், எல்டிஏஎப் (LDAF) போகஸ் மற்றும் 8X சூப்பர் ரெஸ் ஜூம் (Super Res Zoom) கிடைக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங், ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical & Electronic Image Stabilisation) சப்போர்ட் வருகிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சார் இருக்கிறது. 10.5 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் சாம்சங் 3ஜே1 சென்சார் இருக்கிறது.
இந்த பிரீமியம் கேமராவின் பீச்சர்களை பார்க்கையில், மேஜிக் எடிட்டர் (Magic Editor), பெஸ்ட் டேக் (Best Take), மேக்ரோ போகஸ் (Macro Focus), மேஜிக் எரைசர் (Magic Eraser), போட்டோ அன்பிளஸ் (Photo Unblur), மோஷன் மோட் (Motion Mode), ரியல் டோன் (Real Tone), பேஸ் அன்பிளர் (Face Unblur) போன்றவை வருகின்றன.
மேலும், நைட் சைட் (Night Sight), போர்ட்ராய்டு லைட் (Portrait Light), மோஷன் ஆட்டோபோகஸ் (Motion Autofocus) போன்ற பீச்சர்களும் இருக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. 27W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18 வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4,575mAh பேட்டரி வருகிறது.
இந்த கூகுள் பிக்சல் 8 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.47,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ரூ.45,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஹசல் (Hazel), அப்சிடியன் (Obsidian), மின்ட் (Mint) மற்றும் ரோஸ் (Rose) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








