வெளுக்குது விற்பனை.. ரூ.18,000 விலை குறைப்பு.. 64MP கேமரா.. 4385mAh பேட்டரி.. HDR டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஆப்பிள் போன்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கும் கூகுள் பிக்சல் (Google Pixel) மாடல்கள் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) போனானது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பிக்சல் 7ஏ போனின் அறிமுக விலை எப்படி? இப்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? முழு பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த கூகுள் பிக்சல் 7ஏ போன் இந்திய மார்கெட்டில் வெளியானபோது, அதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.27,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் ரூ.2000 மதிப்பில் உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.25,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். முழுதாக ரூ.18,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஈஎம்ஐ மூலம் வாங்கினாலும், ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ரூ.9,600 மதிப்பில் பழைய மொபைல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 7ஏ அம்சங்கள் (Google Pixel 7a Specifications): இந்திய பிரியர்களுக்கு ஏற்ப கேமராவில் பின்னியெடுத்துள்ளது. ஐஎம்எக்ஸ்787 (IMX787) சென்சார் மட்டுமல்லாமல் குவாட் பிடி (Quad PD) மற்றும் குவாட் பயர் (Quad Bayer) சென்சார்களை கொண்ட 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுபோக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மெயின் கேமராவுடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. பிடிஏஎப் (PDAF) போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் செல்பீ கேமராவும் 4K வீடியோ ரெக்கார்டிங்குடன் கிடைக்கிறது. இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எச்டிஆர் (HDR) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளே ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் ஓஎல்இடி (OLED) மாடலாகும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மற்றும் IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப்புடன் டென்சர் ஜி2 (Tensor G2) கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் 3 வருட ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வரையில் பெற்று கொள்ளலாம். 2 மைக்ரோபோன்கள் (Microphones) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இருக்கின்றன. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type C Charging) போர்ட் கிடைக்கிறது.
இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனின் 18W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4385mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 9 மிமீ தடிமன் இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் பாடி எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், பில்ட் குவாலிட்டி பக்காவாக இருக்கும். ஏனென்றால், அலாய் ஃபிரேம் வருகிறது.
சார்கோல் கிரே (Charcoal Grey), சீ ப்ளூ (Sea Blue) அல்லது ஸ்னோவ் ஒயிட் (Snow) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), நாவ்ஐசி (NavIC), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








