கடகடவென சரியும் Vivo 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விவோ ஒய்58 5ஜி (vivo Y58 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்58 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்58 5ஜி போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,390 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): 6.72 ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1024 நிட்ஸ் HBM பிரைட்னஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2 ) சிப்செட் உடன் விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டு வெளிவந்தது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஸ்மார்ட் டைனமிக் லைட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது.
6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. டூயல் சிம், 5ஜி (5G), டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (Stereo speaker setup), 300% ஆடியோ பூஸ்டர் ( 300% audio booster), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது. IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certificati on) கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.


Click it and Unblock the Notifications