Home
Mobile

சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (SAMSUNG Galaxy F14 5G) ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, எக்ஸ்நோஸ் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்..

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy F14 5G Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே (Full HD+ Display) வசதியைக் கொண்டு வெளிவந்தது. மேலும் 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாகப் பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13(Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்..

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் 5ஜி போனுக்கு ஆஃபர் போட்ட பிளிப்கார்ட்..

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் V5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும். குறிப்பாக இந்த சாம்சங் 5ஜி போன் ஆனது அனைத்து சிறப்பு அம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
35 Percent Discount on SAMSUNG Galaxy F14 5G With 5MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X