Home
Mobile

செய்கைனா இதுதான்.. வெறும் ரூ.6,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனமே கொடுக்கும்போது, வாங்காமலா இருக்க முடியுமா? என்று சொல்லும்படி பிரீமியம் லுக்கில் வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, எச்டிபிளஸ் ரெசொலூஷன் டிஸ்பிளே, 1 டிபி மெமரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) போனானது, வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை விவரங்கள் என்ன?

ரூ.8000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு ஒரு சில மாடல்களில் லெதர் பேனல் கிடைக்கின்றன. இருப்பினும், பிராண்ட் நிறுவனங்களில் இந்த பட்ஜெட்டுக்கு வேகன் லெதர் பேனல் மாடலை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இப்போது, சாம்சங் நிறுவனம் லெதர் பேனல் மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் மாடலை அடிமட்ட விலைக்கு கொடுக்கிறது.

செய்கைனா இதுதான்.. வெறும் ரூ.6,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) பேக் செய்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. பட்ஜெட்டில் கிடைக்கும் ஆர்ம் மாலி கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

டிஸ்பிளேவை பார்க்கையில், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வருகிறது. மேலும, 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்த முடியும்.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடையாது. இருப்பினும், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ச் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது.

இந்த சாம்சங் எப்05 போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது. 8.8 எம்எம் தடிமன், 195 கிராம் எடை வருகிறது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. மேலும், வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் சப்போர்ட் வருகிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது.

ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுபோக ரூ.5,950 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. அடிமட்ட விலையில் சாம்சங் போன்ற பிராண்டில் வேகன் லெதர் பேனல் கொண்ட போன் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

Best Mobiles in India

English summary
35 Percent Discount on Samsung Galaxy F05 With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X