ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. 5000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. குறைந்த விலையில் சாம்சங் போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனம் மேம்பட்ட அம்சங்களுடன் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன். எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), டைப்-சி போர்ட் (Type-C Port) போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








