Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.12000 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, எக்ஸிநோஸ் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஸ்பேக் (Cashback) சலுகையும் உள்ளது. எனவே இந்த சாம்சங் போனை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க..  ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A14 5G Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். 1,080x2,40 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன். எனவே இதன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் எகஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்தது. பின்பு OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க..  ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

அதேபோல் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali-G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மர்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன். மேலும் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15W பாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USBடைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
35 Percent Discount on Samsung Galaxy A14 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X