இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரெட்மி 13சி 5ஜி போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): அதேபோல 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ்(Corning Gorilla Glass) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6எம்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி 13சி 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் டூயல் சிம் சப்போர்ட் கொண்டுள்ளது ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன்.
50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) ரெட்மி 13சி 5ஜி போனில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செலபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் ஃபிலிம் கேமரா (FilmCamera), ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), எச்டிஆர் (HDR), பால்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), சாப்ட்-லைட் ரிங் (Soft-light Ring) உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3, ஜிபிஎஸ் (GPS), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (Al Face Unlock), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack)போன்ற வசதிகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








