OPPO ஒரே போடு.. ரூ.3,199 ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள், பிளிப்கார்ட் தளத்தில் ஆஃபர் விலைக்கு கிடைக்கும் ஓப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இந்த ஓப்போ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 35 சதவீத தள்ளுபடியுடன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.31,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,199 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.28,800 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

அண்டர்வாட்டர் போட்டோகிராபி கொடுக்க பிரீமியம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் பக்கா கவர் கிளாஸ் கிடைக்கிறது. பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
ஓப்போ எப்33 5ஜி அம்சங்கள் (OPPO F33 5G Specifications): 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏஜிசி டிடி-ஸ்டார் டி+ (AGC DT-STAR D+) கவர் கிளாஸ் கிடைக்கிறது. 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1400 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. அண்டர்வாட்டர் மோட் உள்ளது.
போர்ட்ராய்டு மோட், நைட் மோட், டூயல்-வியூ வீடியோ உள்ளிட்ட கேமரா மோட்களும் கிடைக்கின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 MAX) சிப்செட்டை இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டியூரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஐபி66 ரேட்டிங் + ஐபி68 ரேட்டிங் + ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷனையும் இந்த ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.
மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications