கனவுல கிடைக்காத ஆஃபர்.. ரூ.4,500 ரேட் கட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
புது மாடல் வந்தால், பழைய மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு நடப்பது வழக்கமானதுதான். ஆனால், பொசுக்குனு ரூ.4,500 விலை குறைப்பு செய்தால், கஸ்டமர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் செய்யாமல் இருப்பார்களா? அப்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) போனுக்கு கிடைக்கிறது. இந்த ஐக்யூ மாடலின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ இசட்10 (iQOO Z10) மற்றும் ஐக்யூ இசட்10எக்ஸ் (iQOO Z10x) ஆகிய மாடல்கள் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. இதனால் பழைய மாடல்களின் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்யூ இசட்9 5ஜி போனுக்கு ரூ.4,500 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஐக்யூ இசட்9 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.17,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் வாங்கி கொள்ள கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. நேரடி விலை குறைப்பில் வாங்கலாம்.
இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.16,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே குறையாக இருக்கும். ஆனால், 2 ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்9 5ஜி அம்சங்கள் (iQOO Z9 5G Specifications): இந்த ஐக்யூ போனில் டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் பி3 கலர் காமட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (4nm Octa Core MediaTek Dimensity 7200) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐக்யூ இசட்9 5ஜி போனில் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது.
செல்பீ கேமராவில் சென்சார்கள் இல்லை. இருப்பினும், 16 எம்பி ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஐக்யூ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. கிராபெனி ப்ளூ (Graphene Blue) அல்லது ப்ரஷ்டு கிரீன் (Brushed Green) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி சிலாட் சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








