Home
Mobile

ஆர்டர் அள்ளுது.. ரூ.17000 விலை குறைப்புனா விடுவாங்களா.. 120W பிளாஷ் சார்ஜ்.. 48MP கிம்பல் கேமரா.. என்ன மாடல்?

தரமான பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன், நம்ப முடியாத ஆஃபர் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால். புது போன் வாங்கும் ஆசையில் உள்ள யார் தான் சும்மா இருப்பார்கள்! அப்படியான ஒரு ஸ்மார்ட்போன் தான் 34% தள்ளுபடி விலையில், அதாவது முழுதாக ரூ.17,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

அது ஐக்யூ 9 5ஜி (iQOO 9 5G) ஸ்மார்ட்போனாகும். இந்த சலுகை மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பு விற்பனையான அமேசான் ப்ரைம் டேவிற்கு (Amazon Prime Day Sale) சற்று முன்னதாக வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்னம் ப்ரைம் டே சேல் ஆனது ஜூலை 15 மற்றும் ஜூலை 16இல் நடக்கிறது.

ஆர்டர் அள்ளுது.. ரூ.17000 விலை குறைப்புனா விடுவாங்களா!

ஜூலை 15 அல்லது ஜூலை 16 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதவர்கள் ஐக்யூ 9 5ஜி ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கும் ரூ.17,000 தள்ளுபடியை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். இந்த போனின் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? இதை இப்போது நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ விவரங்கள்:

முன்னரே குறிப்பிட்டபடி, ஐக்யூ 9 5ஜி மீது 34 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.49,990 க்கு பதிலாக ​​வெறும் ரூ.32,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, ஐக்யூ 9 5ஜி மீது வங்கி சலுகைகள் (Bank Offer) மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் (Exchange Offer) அணுக கிடைக்கும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ரூ.1250 என்கிற இன்ஸ்டன்ட் தள்ளுபடி (Instant Offer) கிடைக்கும். இதற்காக நீங்கள் எச்டிஎப்சி வங்கி கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனையை செய்ய வேண்டியிருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பொறுத்தவரை, ரூ.27,950 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும். இது உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலைமையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐக்யூ 9 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் - கண்டிப்பாக! ஏனென்றால் இது அட்டகாசமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அது 2376 × 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (6.56-inch full HD+) டிஸ்பிளேவாகும்.

மேலும் செயல்திறனில் எந்த குறையும் வைக்காத குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5ஜி சிப்செட்டை (Qualcomm Snapdragon 888+ 5G chipset) பேக் செய்கிறது. புகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு அதிக அக்கறை இருந்தால், ஐக்யூ 9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது உங்களை நிச்சயம் ஈர்க்கும். ஏனென்றால் இதில் 48எம்பி கிம்பல் ப்ரைமரி கேமரா (GIMBAL Primary Camera) உள்ளது.

அதனுடன் 13 எம்பி சூப்பர் வைட் ஆங்கிள் கேமரா + 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) கொண்ட 13 எம்பி 50மிமீ ப்ரொபஷனல் போர்ட்ரெய்ட் கேமரா (Professional Portrait camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

எல்லா அம்சங்களையும் விட முக்கியமாக இது 120W பிளாஷ் சார்ஜிங்கை ஆதரவை கொண்ட 4350mAh பேட்டரியை பேக் செய்கிறது. ஐக்யூ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 6 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்யும். கடைசியாக இது வைஃபை 5, ப்ளூடூத் 5.1, 3.5 மிமீ ஜாக், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 Percent Offer on iQOO 9 5G Smartphone Is This Phone Worth For Rs 32990 or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X