Home
Mobile

மிரட்டுது ஆர்டர்.. முழுசா ரூ.25,300 டிஸ்கவுண்ட்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 3900mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் சாம்சங் போனை நம்ப முடியாத விலை குறைப்பில் வாங்க வேண்டுமானால், இப்போது அமேசான் (Amazon) தளத்தில் சரியான நேரம் வந்து விட்டது. ரூ.74,999 பட்ஜெட்டில் கேமரா, பேட்டரி மற்றும் டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் அல்ட்ரா பிரீமியமாக வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) போனானது, இப்போது ரூ.25,300 விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த சாம்சங் பேக் செய்கிறது? பேங்க் டிஸ்கவுண்ட் எப்படி? உள்ளிட்ட விவரம் இதோ.

சாம்சங் எஸ்23 சீரிஸ் போன்களுக்கு இந்திய மார்கெட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், பிரீமியம் லுக்கில் ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் (Armor Aluminum Frame), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் சாம்சங்கின் லேட்டஸ்ட் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) போன்ற பீச்சர்களை இந்த சீரிஸ் பேக் செய்துள்ளது.

மிரட்டுது ஆர்டர்.. முழுசா ரூ.25,300 டிஸ்கவுண்ட்.. OIS கேமரா மாடல்!

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அம்சங்கள் (Samsung Galaxy S23 Specifications): இந்த சாம்சங் போனில் பிரீமியம் போன்களில் வரும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒன் யுஐ 5.1 (One UI 5.1) சப்போர்ட் வருகிறது.

மேலும், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. டிஸ்பிளே பீச்சர்கள் பின்னிப்பெடல் எடுத்துள்ளன. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.1 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. 1750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X ஸ்பேஸ் ஜூமிங் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

மேலும், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இதுபோக விடிஐஎஸ் டெக்னாலஜி (VDIS Technology) வருகிறது. ஸ்மூத் மற்றும் ஷார்ப் வீடியோ அவுட்புட் கொடுக்க இந்த டெக்னாலஜி பயன்படுகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது.

மேலும், வயர்லெஸ் பவர்ஷேர் கொண்ட 3900mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 7.6 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. கேலக்ஸி ஏஐ பீச்சர்களை பார்க்கையில், லைவ் டிரான்ஸ்லேட், சர்க்கில் டூ சர்ச், போட்டோ அசிஸ்ட் போன்றவை வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் ரூ.79,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இப்போது, அமேசான் தளத்தில் ரூ.25,300 விலை குறைப்பில் விற்பனையாகிறது. ஆகவே, ரூ.49,699 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது. பாண்டம் பிளாக் (Phantom Black), கிரீன் (Green), கிரீம் (Cream) மற்றும் லேவண்டர் (Lavender) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 Percent Discount on Samsung Galaxy S23 With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X