Home
Mobile

யாரு விடுவா? முழுசா ரூ.8505 டிஸ்கவுண்ட்.. 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.. அதுவும் சாம்சங் போன் வேற!

இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி (Samsung Galaxy M33 5G) போன், 50எம்பி குவாட் கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 1டிபி வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் என்று பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

இப்போதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த சூழலில் பிளிப்கார்ட்டில் முழுசாக 34 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வங்கிகளின் ஆஃபர்களும் கொடுக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டால், வெறும் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எம் 33 போனை வாங்கிக்கொள்ள முடியும். இதுகுறித்த விவரங்கள் இதோ.

யாரு விடுவா? முழுசா ரூ.8505 டிஸ்கவுண்ட்.. அதுவும் சாம்சங் போன் வேற!

சாம்சங் கேலக்ஸி எம் 33 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M33 Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12) உடன் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 (Octa-Core Exynos 1280) சிப்செட் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 33 போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் உள்ளது. குவாட் (Quad) ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் (Main) கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் (Ultra-Wide-Angle) கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) + 2 எம்பி மேக்ரோ சென்சார் (Macro Sensor) வருகிறது.

20 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஹை-லைட் அம்சமாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொண்டுக்கப்படுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் வரை பேக்கப் கிடைக்கும். மிஸ்டிக் கிரீன் ( Mystique Green), டீப் ஓஷன் ப்ளூ ( Deep Ocean Blue)மற்றும் எமரால்டு பிரவுன் (Emerald Brown) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போன் மிட்-ரேன்ஞ் அம்சங்களை கொண்டிருப்பதால் ரூ.24,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் அதிரடியாக விலை குறைக்கப்பட்டு, ரூ.18,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையிலும், முழுதாக 34 சதவீத தள்ளுபடியை பிளிப்கார்ட் (Flipkart) அறிவித்திருக்கிறது. அதுபோக பேங்க் ஆஃபர்கள் ஏராளமாக உள்ளன.

அதாவது, இந்த சாம்சங் போனின் ரூ.24,999 விலையில் இருந்து 34 சதவீதம் ஆஃபர் போக மீதமுள்ள ரூ.16,494க்கு இப்போது, விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையிலும் எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கிறது. அதோபோல ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 மதிப்பிலான கிஃப்ட் கார்டுகள் கிடைக்கின்றன.

மலிவான பட்ஜெட்டில் நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 Percent Discount on Samsung Galaxy M33 5G in Flipkart Check Price Specifications Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X