விட்ராதீங்க சார்.. இயர் எண்ட் சேலில் ரூ.20999-க்கு 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் (Flipkart Year End Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் மெயின் கேமரா, 32 எம்பி டெலிபோட்டோ கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 6 ஜென்1 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் லெதர் பேனக் பேனல் கொண்ட ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த ரியல்மிக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
ரியல்மி 12 ப்ரோ அம்சங்கள் (Realme 12 Pro Specifications): இந்த ரியல்மி ப்ரோ மாடலானது, கேமராவில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. போர்ட்ராய்ட் பிரியர்களுக்கான சென்சார்கள் மற்றும் பீச்சர்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாரும், 4X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) கிடைக்கிறது. மேலும், 20X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது.
போட்டோகிராபி பீச்சர்களை பார்க்கையில், ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), சூப்பர் குரூப் போர்ட்ராய்டு மோட் (Super Group Portrait Mode), மூன் மோட் (Moon Mode), ஸ்டார்ரி மோட் ப்ரோ (Starry Mode Pro) போன்றவை வருகின்றன. ஏஐ ப்யூட்டி (AI Beauty), ஏஐ சீன் (AI Scene) போன்ற பீச்சர்களும் இடம் பெற்றுள்ளன.
டிஸ்பிளேவில் பிரீமியம் அனுபவம் கிடைக்கும்படி 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமோலெட் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த ரியல்மி 12 ப்ரோ போனில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 எஸ்ஓசி (4nm Octa Core Snapdragon 6 Gen 1 SoC) சிப்செட் மற்றும் மிட்-பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் யூனிட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ (Realme UI) வந்திருக்கிறது.
இந்த போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. 67W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. மேலும், மிட்-ரேஞ்ச் போன்களில் எதிர்பார்க்கும் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. பெய்ஜ் (Beige) மற்றும் ப்ளூ (Bule) கலர்களில் லெதர் பேனலுடன் ஆர்டருக்கு வருகிறது.
ரியல்மி 12 ப்ரோ பிளிப்கார்ட் விற்பனை (Realme 12 Pro Flipkart Sale): இந்த ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.26,999 பட்ஜெட்டில் வெளியானது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் வாங்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் எதும் தேவையில்லை.


Click it and Unblock the Notifications








