பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.16,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா, 11ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 67W சார்ஜிங் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட போக்கோ எக்ஸ் 5 ப்ரோ (POCO X5 Pro) போன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
போக்கோ எக்ஸ்5 ப்ரோ அம்சங்கள் (POCO X5 Pro Specifications): இந்த போக்கோ போனில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்ளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த டிஸ்பிளேவில் ப்ரீமியம் அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 12 (Android 12) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் வருகிறது. அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போக்கோவில் 5 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போன் பட்ஜெட்டிலும் பக்காவான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது.

அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் ஐசோசெல் எச்எம்2 (Samsung ISOCELL HM2) சென்சாருடன் வருகிறது. அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் ஈஎஸ்ஐ (EIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
அதோடு 10X ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. போர்ட்ராய்டு மோட், டாக்குமென்ட் மோட், நைட் மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவிலும் மூவி ஃபிரேம், வாய்ஸ் ஷட்டர், ஷார்ட் வீடியோ போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி சார்ஜிங் (Type-C), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது.
IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. யெல்லோ (Yellow), ஹரிசோன் ப்ளூ (Horizon Blue) மற்றும் அஸ்ட்ரல் பிளாக் (Astral Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போது, விலை குறைப்பு காரணமாக பிளிப்கார்ட் தளத்தில், வெறும் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையிலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு (Axis Bank Credit Card) ரூ.850 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போக்கோ போனை வெறும் ரூ.16,149க்கு வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








