பிளிப்கார்ட் அதிரும்.. 108எம்பி கேமரா.. 5030mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் போக்கோ எ6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எ6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): 6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3), 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன். அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை
வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் 108 எம்பி மெயின் கேமரா (Samsung ISOCELL HM6) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி மாடல்.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
5030mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker),
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








