அப்படி போடு.. ரூ.5,899 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. ஆஃபரில் POCO போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.71-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ சி6 (Poco C61) ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ சி61 ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ சி61 அம்சங்கள் (Poco C61 specifications): மீடியாடெக் ஹலியோ ஜி36 சிப்செட் (MediaTek Helio G36 SoC) கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி கொண்டுள்ளது போக்கோ சி61 போன்.
அதேபோல் 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியைக் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். பின்பு 1650 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ சி61 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்(MicroSD card slot) ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி மெயின் கேமரா + 0.8எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது போக்கோ சி61 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ சி61 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக டூயல் சிம், 4ஜி, வைஃபை 5, புளூடூத் 5.3, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ சி61 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








